தேர்தல் ஆணையம் ஆர்கேநகர் இடைத் தேர்தல் தேதியை அறிவித்ததைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள்தேர்தல் பணிகளை முடக்கி விட்டுள்ளன.

முதல் கட்டமாக கட்சிகள் அவர்கள் சார்பாக தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக  சார்பாக ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பிரபலத்தை களமிறக்க உள்ளதாக பாஜக  மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை நடக்க இருந்த இடைத் தேர்தலில் பாஜக சார்பில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டி யிட்டிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் யாரைக் களமிறக்க போகிறார்கள் என்று  தொண்டர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Leave a Reply