காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியபோது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவியை அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால்நேரு நாடியதாக மத்திய அமைச்சர் உமா பாரதி கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தியா சுதந்திரம்பெற்றதும், காஷ்மீரை ஆட்சிசெய்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில், சேக் அப்துல்லா வலியுறுத்தியும் கையெழுத்து போடவில்லை.

அப்போது பாகிஸ்தான் படைகள் காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் திடீரென தாக்குதல்நடத்தின. இதனால் இந்திய படைகள் செய்வதறியாது திகைத்து நின்றன.
 
நிலைமையை உணர்ந்த அப்போதைய பிரதமர் ஜவகர்லால்நேரு, ஆர்எஸ்எஸ். தலைவர் குருஜி கோல்வல் கருக்கு கடிதம் எழுதினார். அதில்,ராணுவத்துடன் இணைந்து போரிடவருமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஜம்முகாஷ்மீர் சென்று ராணுவத்துக்கு உதவி செய்தனர்.

ராணுவம் மீது கல்வீசப்படுகிறது. வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. ராணுவம் பெண்களை பலாத்காரம் செய்வதாக ஜவஹர்லால்நேரு பல்கலையில் பேசுகின்றனர். இதெல்லாம் பேச்சுசு தந்திரம். ஆனால், நாட்டிற்காக ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உயிர் தியாகம் செய்யதயாராக உள்ளதாக கூறுவது மட்டும் ராணுவத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply