ஆர்கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக தலைவர் அமித் ஷா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் உட்பட 139 பேரை நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி யுள்ளது.

பொதுத்தேர்தல் அல்லது இடைத் தேர்தல் நடக்கும் போது அங்கீகரிக்கப்பட்ட, பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை நட்சத்திர பேச்சா ளர்களாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். அவ்வாறு அங்கீகரித்து அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கான பயணச்செலவு, வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கான செலவுகள் வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேராது.

தற்போது ஆர்கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால் பாஜக, அதிமுக, திமுக, நாம்தமிழர் கட்சிகளை சேர்ந்த 139 பேருக்கு தேர்தல் ஆணையம் நட்சத்திரபேச்சாளர் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாஜக சார்பில், தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்ட 26 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அ.தி.மு.க.,வில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 18 அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பொன்னையன், வளர்மதி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 25 பேருக்கும் திமுக.,வில் கட்சியின் செயல்தலைவர் முக.ஸ்டாலின், துரை முருகன், கனி மொழி உட்பட 27 பேருக்கும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதவிர பதிவு செய்யப்பட்ட கட்சியான நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட 19 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply