திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுவதை கேட்கவும், அவர் கோரிக்கையை ஏற்கவும் ஆளுநர்மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ள நிலையில் அவர் இந்தகருத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தி எதிர்க் கட்சி துணைத்தலைவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்திதொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், மத ரீதியிலான சிலகருத்துக்களை கூறியிருந்தார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. திமுக எம்எல்ஏ.க்கள் அன்பழகனும், சுப்பிரமணியனும் ஆளுநரை காலை சந்தித்து ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திய நிலையில், துரைமுருகன் ஆளுநருக்கு அதைவலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதச்சார்பின்மைக்கு எதிராக பேசியதுடன் மக்களை மதரீதியாக துண்டாட பார்ப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பதவி நீக்கக்கோரும் விவகாரத்தில் திமுக தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆளுநர்மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது. மு.க.ஸ்டாலின் கூறுவதை கேட்கவும், அவர் கோரிக்கையை ஏற்கவும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ட்வீட் செய்துள்ளார்.

Comments are closed.