ஆளுநர் ஆய்வு அவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்ய சென்றபோது திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புகொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்பிறகு ஆளுநர் தனது ஆய்வின் போது கீற்று வேய்ந்த இடத்தில் எட்டிப் பார்த்ததாகவும், அங்கு இளம்பெண் குளித்துக் கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இது, ஆளுநர் தரப்பில் மறுக்கப்பட்டது. இந்தசர்ச்சைகள் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியாதாவது: ஆளுநர் ஆய்வு அவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதை யாரும் தட்டிகேட்க முடியாது. தமிழகத்திற்கு கூடுதல் நிதி கிடைக்க பரிந்துரை செய்யவே ஆளுநர் ஆய்வுகளை நடத்திவருகிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு கூடுதல் நிதி கிடைப்பதை தடுக்கவே எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மக்களின் பரிதவி ப்பில் கூட ராகுல் காந்தி அரசியல் செய்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.
 

Leave a Reply