நல்ல எதிர்கட்சியாக செயல்படுவதில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின் உண்மை த்தன்மையை காங்கிரஸ் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் கட்சிகள்  வெளிப்படுத்தி வருகிறது. முன்னதாக ஊழல், நல்ல அரசை வழங்கதவறியது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அவர்களை வெளியேற்றினர். தற்போது, எதிர்க் கட்சிக்கான பணியை செய்யவும் காங்கிரஸ் தவறிவிட்டது.   

ஒருகுடும்பத்தின் வளர்ச்சிக்காக, நிறைய திறமையான காங்கிரஸ் உறுப்பினர்கள், தங்களது உழைப்பை தியாகம் செய்யவேண்டும். களப்பணிகளை செய்து கட்சிக்காக உழைத்தகாங்கிரஸ் உறுப்பினர்களின் உழைப்பு ஒருகுடும்பத்துக்கு மட்டும் பலன் அளிப்பதை எண்ணி கவலை கொண்டிருக்கிறேன்.   

பாஜகவின் தலைமை பதவிகள் உழைப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப் படும், உறவின் அடிப்படையில் அல்ல. அனைவரையும் ஒன்றிணைத்து முன்நோக்கி கொண்டுசெல்லும் தைரியம் பாஜகவிடம் மட்டுமே உள்ளது. வேறு எந்த அரசியல் கட்சிக்கும் அதுகிடையாது. 

மத்திய அரசை குறிவைக்க எதிர்க் கட்சியினர் பிரச்சாரங்கள், சுட்டுரை பதிவுகள் என புதியமுயற்சிகளை கொண்டு வர வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இந்த சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கும் படைகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்" . 

 பாஜகவினர் தங்களது வாக்குசாவடிகளை வலுப்படுத்த வேண்டும். எதிர் வரும் மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கு  தயாராக வேண்டும்.

ஜெய்ப்பூர், நவாடா, காஸிய பாத், ஹஸாரி பாத் மற்றும் மேற்கு அருணாச்சல் ஆகிய 5 மக்களவை தொகுதிகளை சேர்ந்த பாஜக கட்சியினரிடம் பிரதமர் மோடி வியாழக் கிழமை உரையாற்றினார்

 

Leave a Reply