பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டுபேசியதற்காக இசைஞானி இளைய ராஜாவை அவமதிப்பதா? எனக்கேட்டு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் பாஜக தேசியதலைவர் ஜெ.பி.நட்டா.

கடந்த சிலதினங்களுக்கு முன்னர் இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இளைய ராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனதுகருத்தை சொல்லியிருந்தார். அது மாநில மற்றும் தேசியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒருதரப்பினர் அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனதுகருத்தை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டேன் என இளையராஜா திட்டவட்டமாக தன்னிடம் தெரிவித்ததாக அவரதுசகோதரர் கங்கை அமரன் தகவல் கொடுத்திருந்தார். இத்தகைய சூழலில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இந்தவிவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“தமிழ்நாட்டை ஆளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை அவமதித்து வருகிறார்கள். ஆளும்தரப்புக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாக இளையராஜா பேசவில்லை என்பதற்காக நாட்டின் ஆகச் சிறந்த இசைமேதையை இப்படி இழிவுசெய்து வருகின்றனர். அவரது கருத்து என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். இசை மேஸ்ட்ரோவை அவமதிப்பது நியாயமாகாது.

இளைய ராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்து தாக்க படுகின்றனர். இதுமாதிரியான சம்பவங்களில் எதிர்கட்சிகள் சகிப்புத் தன்மையின்றி நடந்து கொள்கின்றன” என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.