சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டுவரும் எந்த ஒருதிட்டமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

அதாவது, வசதிபடைத்தோரும் இட ஒதுக்கீடு கேட்டு போராடிவருவது, நமது அரசியல் சாசனத்தின் உணர்வுக்கு விரோதமானது என ஆர்.எஸ்.எஸ். கூறியதை அடுத்து, அருண்ஜேட்லி இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “தற்போதைய இடஒதுக்கீடு முறையே தொடர்ந்து பராமரிக்கப்படும் என்பது அரசின்கொள்கை, இதில் மாற்றம் எதுவும் இல்லை ” என்றார்.

நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “இடஒதுக்கீடு முறை தொடரும். ஆர்எஸ்எஸ். அதனை முடிவுக்கு கொண்டு வருவதாக ஒருபோதும் பேசவில்லை. இடஒதுக்கீட்டு முறையை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்று தான் ஆர்.எஸ்.எஸ். கூறியதே தவிர அதனை ஒழிக்கவேண்டும் என்று கூறவில்லை” என்றார்.

Leave a Reply