இதுதாங்க ஐந்து ஆண்டு கால அதிமுக அரசின் சாதனை’ என்று ஒரு லிஸ்ட் வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதைப் பார்த்து அதிமுகவினர் பெரும் பீதி அடைந்துள்ளனர். காரணம், அப்படியாப்பட்ட டென்ஷன் லிஸ்ட் அது! வாட்ஸ் அப்பில் அதிமுகவின் சாதனை (வேதனை)களை நீங்களும் படியுங்கள்:

* வெற்றி பெற்ற முதல் நாள் ‘உங்கள் அரசு’ என்ற வார்த்தை மறுநாள் ‘நான், எனது அரசு’ என்றானது.

* சமச்சீர் கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.

* பாட புத்தகங்களை அச்சடித்து ரூ. 450 கோடியை வீணடித்தது.

* அண்ணா நூலகத்தை நாசப்படுத்தியது.

* பஸ் கட்டணம் உயர்த்தியது.

* பால் விலையை உயர்த்தியது.

* மின்சார கட்டணத்தை உயர்த்தியது.

* கடுமையான மின் தட்டுபாட்டை ஏற்படுத்தியது.

* ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காதது.

* தொழில் வளர்ச்சியை முடக்கியது.

* தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டே ஓடியது.

* சட்டசபையை ‘பெஞ்ச் தட்டும் சபையாக’ மாற்றியது.

* கரும்பு விவசாயிகளை கதற விட்டது.

* நெல் விவசாயிகளை நெம்பி எடுத்தது.

* கிராம, தாலுகா அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்பட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.

* சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.

* உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்தை பயணிகளுக்கு கொடுத்தது.

* அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.

* தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.

* கொடநாட்டில் வாசம்.

* பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.

* மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.

* இலக்கு வைத்து மது விற்றது.

* தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.

* ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.

* நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.

* அமைச்சர்கள் மண் சோறு தின்றது.

* தாது மணலை கொள்ளையடித்தது.

* ஆவின் ஊழல்.

* கமல்ஹாசனை கலங்கடித்தது.

* விஜய்யை வியர்க்க வைத்தது.

* சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.

* கனிமவளத்தை களவாடியது.

* அப்துல் கலாமை அவமதித்தது.

* ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது.

* 25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.

* முட்டை, பருப்பு ஊழல்.

* மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை.

* லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது.

* பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.

* நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது.

* ஜல்லிகட்டை ஜடமாக்கியது.

* தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.

* திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர்.

* பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.

* செவிலியரை சொல்லியடித்தது.

* உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்தியT படையிடம்.

* ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.

* ஆர்.கே.நகரில் இமாலய கள்ள ஓட்டு.

* வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.

* புரட்சிகர மக்கள் பாடகர் கோவனை கைது செய்தது.

* பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.

* மிடாஸில் மிதக்கும் தமிழகம்.

* ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.

* விஷன் 2023 வெளியே வராமலே போனது.

* மன்னார்குடி வகையறாக்கள் வாங்கி குவிக்கும் தியேட்டர்கள்.

Leave a Reply