ஜனாதிபதி தலைமையில் நடக்கவிருக்கும், ஜி.எஸ்.டி. துவக்க விழாவில், காங்கிரஸ், திரிணாமுல், திமுக, கம்யூனிஸ்டு பங்கேற்பது சந்தேகம்.

“அவசர, அவசரமாக செயல்படுத்துவதால், வணிகர்கள் துன்புறுத்தப்படலாம், திட்டம் தோல்வியுறலாம், பொருளாதாரம் பாதிக்கப்படலாம்”, என ஏகப்பட்ட “லாம்”கள், இம்முடிவின் பின்னணியில் இருப்பதாக செய்திகள் உலவுகின்றன.

இதுதான் மோடிஜிக்கும், ஏனையோருக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம்.

.
.ஜி.எஸ்.டி.யை ஏப்ரல், 2016ல் அமல்படுத்த திட்டமிட்டார், மோடிஜி. ராஜ்ய சபாவில் மெஜாரிட்டி இல்லை எனும் காரணம் உட்பட பல்வேறு தடைகளை சமாளிக்க வேண்டியிருந்தது. செயல்படத் துடிக்கும், மோடிஜியின் பார்வையில், ஜூலை, 2017 என்பது, 15 மாத கால தாமதம். ஆனால், செயல்பட அச்சப்படும் சிக்யூலர்கள் பார்வையில், ஜூலை, 2017 என்பது, அவசர அவசரம்.

.

செயல்படுவோருக்கும், பயப்படுவோருக்கும் இதுதான் வித்தியாசம். தேசத்தின் வளர்ச்சி, 15 மாத காலம் தாமதித்து விட்டது என தேசபக்தன் துடிக்கிறான். “இன்னும் கொஞ்சம் தாமதமாகட்டுமே”, என்று ஒரு சாரார் அலட்சியம் காட்டுகிறார்கள்.

100% சரி செய்தபிறகு, ஒரு திட்டம் செயல்படவேண்டுமானால், 0+0=0 என்ற கணக்கை மட்டும்தான் அனைவரும் செயல்படுத்த முடியும். " சும்மா உட்கார்ந்திருப்பதென முடிவெடுத்தால் கூட, 100% சும்மா உட்கார்ந்திருக்க முடியாது ", எனும் வடிவேலு காமெடி காட்சிதான், சிக்யூலர்களை பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.

ஜி.எஸ்.டி கவர்னிங் கவுன்சில், ஏக மனதாக முடிவெடுத்த பிறகே, ஜி.எஸ்.டி.யின் பல அம்சங்கள் அமல்படுத்தப்படுகிறது. சட்டங்கள், மத்தியில் மட்டுமல்ல, மாநில சட்டசபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து கட்சியினரும், இதில் இடம் பெற்றுள்ளனர்.

“ஏக மனது” எனும் கருத்துருவாக்கத்தினால்தான், சில குறைகள் காணப்படுகின்றன.
அவையும், காலப்போக்கில் நீக்கப்படும்.“விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் னாளை யெடுத்து” – பொய்யாமொழி. போர் புரிந்துகொண்டிருக்கும் நாளே பிறந்தநாள் என்றும், போர்புரியாது கழிந்த நாள் பிறவா நாள் என்றும் கருதுகின்றவனே சிறந்த வீரன்.

.

பொய்யாமொழியின் இலக்கணப்படி, தேசபக்தன் மோடிஜி சிறந்த வீரன். விழுப்புண்படத் தயங்காத வீராதி வீரன். ஜூலை 1 முதல், துவங்கவிருக்கும், தாக்குதல்களை எதிர்கொள்ள, வீரனுக்கு துணை நிற்போம். தாக்குதல்களில் பல, கருப்பு பண முதலைகளின் பினாமி தாக்குதல்களாகவும் இருக்கலாம்.

Leave a Reply