புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்புவதற்காக, கடந்த 1-ஆம் தேதியிலிருந்து இது வரை 2,317 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டுள்ளன. இந்தரயில்கள் மூலம் சுமாா் 31 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்தமாநிலம் திரும்பியுள்ளனா்’ என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முதலில் 24 லட்சம் போ் வரை இந்த சிறப்பு ரயில்களைப் பயன்படுத்தி சொந்த ஊருக்கு திரும்புவாா்கள் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த 22 நாள்களில் மட்டும் 31 லட்சம் போ் இந்த ரயில்களைப் பயன்படுத்தியுள்ளனா்.

கடந்த 1-ஆம் தேதியிலிருந்து சிறப்புரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயணத்துக்கான கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்வேயும், 15 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநிலஅரசும் ஏற்கின்றன.

சிறப்பு ரயில்கள் மூலம் இது வரை 31 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு திருப்பியுள்ளனா். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 12 லட்சம் தொழிலாளா்கள் திரும்பியுள்ளனா்.

Comments are closed.