காங்கிரஸ்கட்சி மீது பாஜக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைக்கிறது.

இதுபற்றி அந்தக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதி மந்திரியுமான அருண்ஜெட்லி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில், ‘‘பதவிநீக்க தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி, தனது தோழமை கட்சிகளுடன் சேர்ந்து அரசியல் கருவியாக பயன்படுத்த தொடங்கி உள்ளது. பதவிநீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை பயன்படுத்துவது ஆபத்தான நிகழ்வுஆகும்’’ என குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘இது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை ஆகும். அத்துடன், நீங்கள் எங்களுடன் இருக்க சம்மதிக்கா விட்டால், உங்களை பழிவாங்குவதற்கு 50 எம்.பி.க்கள் போதும் என்று மற்ற நீதிபதிகளுக்கு செய்திவிடுப்பதும் ஆகும்’’ என்றும் பதிவு செய்து உள்ளார்.

Leave a Reply