‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரை மூலம் கவிஞர் வைரமுத்து தனக்குத் தமிழும்தெரியாது, தமிழர் பண்பாடும் தெரியாது என்பதை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தக் கட்டுரையின் நோக்கம் வைணவர்கள் நாளும் போற்றி வணங்கிடும் ஆண்டாளை இழிவு படுத்துவதற்கே எழுதப்பட்டதாகும்.


மனோன்மணீயம் சுந்தரானார் பல்கலைக் கழகம், 2012-13-ஆம் ஆண்டு இளங்கலை பாடத்திட்டத்தில், முதலாண்டு முதல்பருவம் தமிழ்ப் பாடப்பகுதியில் தோழர் ஈ.செல்வராஜ் எழுதிய ‘நோன்பு’ என்னும் சிறுகதையில், ஆண்டாள், பெரியாழ்வார், வல்லபதேவன் ஆகியோர் இழிவுபடச் சித்தரிக்கப்பட்டிருந்தனர். அஆஙக மற்றும் பாஞ்சஜன்யம், கீதாசார்யன் பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்ததால், அந்த விஷமத்தனமான கட்டுரை பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.


இன்று ‘கள்ளிக்காட்டுக் காவியக் கவிஞர்’, ‘மெட்டுக்குப் பாட்டெழுதும் ஒரு கூலிக்காரர்’, ஒரு நாத்திகர் Pseudo Sickular , மரபு வழி வந்த பண்பாட்டு விழுமியங்களை இழிவுபடுத்த முற்பட்டுள்ளார். பூமி தேவியின் ஓர் மறுபிறப்பாக, மக்களை நல்வழிப்படுத்துவதற்காக ‘வேதம் அனைத்துக்கும் வித்தாகும்’ தமிழை, உலக மக்களுக்குக் கொடையாகத் தந்துள்ளார் ஆண்டாள்.


“கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு” என்ற ஆன்றோர் வாக்கின்படி வைரமுத்து போன்ற ‘வைரஸ் கிருமிகள்’, தமிழை, தமிழர் பண்பாட்டை, இழிவு படுத்த முற்பட்டுள்ளது, உயர்மனச் சூழலில் மானுட விழுப்பம் கருதிப் பேணியப் பண்பாட்டு விழுமியங்களை இழிவுபடுத்தும் கட்டுரையாளரின் உள்நோக்கம் சிந்தனைக்குரியது. எழுத்துச் சுதந்திரம், பேச்சுத் சுதந்திரம் என்னும் பெயரில் இவர் நிகழ்த்தும் கலாச்சார அவதூறு கண்டிக்கத்தக்கது.


எழுத்தாளர் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், மதச்சார்பின்மை என்ற முகமூடிகளை அணிந்து, இவர் நிகழ்த்தியுள்ள குற்றங்கள் பல. இவரைக் கொண்டாடி இந்தக் கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழ் ஆசிரியரும் கண்டனத்திற்குரியவராவார்.


இந்தக் கட்டுரையின் நகல் தினமணி இதழுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு மானமுள்ள தமிழினத்தைச் சார்ந்தவரானால் இந்தக் கட்டுரையை உள்ளபடியே வெளியிட வேண்டும். ஏனெனில் தினமணி இதழில் வெளிவந்த கட்டுரையில் பல கருத்துப் பிழைகள், வலிந்து பொருள் கொள்ளுதல், மரபுகளுக்கு மாறான பொருள் விளக்கங்கள் அமைந்துள்ளன. அவைகள் களையப்பட்டு, உண்மையை வெளிக்கொணர்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். ‘சூரியனைப் பார்த்து நாய் குலைப்பது போல்’ ஏதேதோ பொருத்தமில்லாச் செய்திகளை, கட்டுரைக்குத் தேவையற்றச் செய்திகளை மேனாட்டு அறிஞர் ஒருவருடைய கருத்துக்களைத் துணைகொண்டு கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார்.


ஆனால் கவிஞர்வைரமுத்து, கனிமொழி போன்றோர் மற்றைய மதத்தினரின் மூடநம்பிக்கைகளையும், வாழ்க்கை வரலாற்றுகளையும் பற்றி வாய்திறப்பதில்லை.


இதுபோன்ற ஆய்வுகள் முற்போக்குச் சிந்தனை என்ற பெயரில் தமிழில் பெருமளவில் வெளிவருகின்றன. காரைக்கால் அம்மையார், ஔவையார், ஆண்டாள் போன்ற சமயச் சான்றோர்களை இழிவுபடுத்தி சிலர் எழுதி வருகின்றனர். இவர்களுக்கு இந்தியப் பண்பாட்டை எப்படியாவது உருக்குலைத்துவிட வேண்டும் என்று பண்பாட்டுச் சீரழவில் ஈடுபட்டிருக்கும் மற்றைய மதத்தினரின் ‘ஆசீர்வாதங்களும் உண்டு’.


உயர்ந்த நிலையில் அருளாளராகத் திகழும் தமிழ்க் கவிஞர் ஆகிய ஆண்டாளை, அவமானப்படுத்துவது, தமிழ் இனத்தை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும். இது ஒரு மனநோய். இவர்கள் ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சென்று தங்கள் நோயைக் குணபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உடலில் ஆடையின்றி தெருவில் திரிய வேண்டும் காலம் வரும்.


வைரமுத்துவை நோக்கிச் சில கேள்விகள்:-


1. ஆண்டாளை தேவதாசி என்று மேல் நாட்டு அறிஞர் குறிப்பிட்டுள்ளதைக் கட்டுரைக்குப் பொருத்தமில்லாத ஒரு செய்தியை முனைப்புடன் கொடுக்க முற்படுவானேன். அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இந்தியப் பண்பாட்டை, அதுவும் நெடுங்காலமாக வளர்ச்சியுற்ற ஓர் மதக் கொள்கையைப் புரிந்து கொள்ள இந்த மேல்நாட்டு அறிஞர்களால் முடியுமா?


2. “பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப் பொருளாகவும் கருதப்பட்ட 8-ஆம் நூற்றண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய், ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி? மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது” என்பது வைரமுத்துவின் பிதற்றல்களில் ஒன்று.


ஆண்டாள் இறைவனுடைய பத்தினிமார்கள் ஒருவளின் அவதாரமாகக் கொள்ளப்படுகிறார். மானுடரைப் போல வக்ர புத்தி படைத்து, பெண்களை அணைந்து கொள்பவனல்லன் ஸ்ரீமந்நாராயணன், இந்த உலகத்திலுள்ள மனிதப் பெருக்கத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஜீவராசிகளும், மனிதர்கள் உட்பட, அனைவரும் வாழ்வதற்கு பூமி என்ற இருப்பிடம் தேவை. அதைத் தருபவள் பூமிதேவி. செல்வம் தேவை, அதைத் தருபவள் ஸ்ரீதேவி, ஆணும் பெண்ணும் இன்பம் அனுபவிப்பதற்கு உந்து சக்தியாய் விளங்குபவள் நீளை எனப்படும் மூன்றாம் தேவிமார். ஆகவே இவர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே காணப்படுகிறார்கள். நீளையினுடைய அவதாரமே நப்பின்னை. ஜல்லிக்கட்டின் தலைவனே கண்ணன். தமிழர்களுடைய முல்லை நிலப் பண்பாட்டை ஆழ்வார்களுடைய பாசுரங்களில் காணலாம். நுனிப்புல் மேயும் வைரமுத்துவிற்கு இவையெல்லாம் தெரியாது. திருப்பாவைக்கும், நாச்சியார் திருமொழிக்கும் உள்ளுறைப் பொருள் என்ற ஒன்று உண்டு. ‘உதடு’ ஞானத்தின் வெளிப்பாடாகவும், பெண்ணின் ‘தடமுலைகள்’ பக்தியின் வெளிப்பாடாகவும், இடை வைராக்கியத்தின் குறியீடாகவும் என்ற உள்ளுறைப் பொருள் உண்டு. அக இலக்கியக் கோட்பாடுகளில், ‘இறைச்சி உள்ளுறை உவமம்’ என்ற குறியீடுகள் உண்டு. இதை இதை இந்தக் கவிஞர் அறியார் போலும்.


ஆண்டாளுடைய நிலை மிக உயர்ந்ததொன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் தலைவி நிலையில் (மனத்தளவில்) தம்மை உள்ளத்தில் கொண்டு கண்ணன் மீது காதல் பாடல்களைப் பாடியுள்ளனர். ஆனால் ஆண்டாளோ பெண்ணாகவே பிறந்து கண்ணன் மீது காதல் கொண்டாள். அந்தக் காதல் கட்டுக்கடங்காது, உணர்ச்சிகள் கொப்பளிக்க வெளிப்படும் பாடல்கள் பலவற்றை நாச்சியார் திருமொழியில் காணலாம்.


தமிழ் இலக்கிய, இலக்கண மரபில் “காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்று வரையறுத்துள்ளனர் தமிழர்கள். அதற்கு உதாரணம் அகநானுறு 398-ஆம் பாடலாகும். காமம் மிகுதல் பற்றி அனைவரும் உணர்வர். படர் என்பது நினைவு. படர்ந்து செல்வதால் நேரும் துன்பத்தைக் குறிக்கும். இதற்காகவே திருவள்ளுவர், ‘படர் மெலிந்து இரங்கல்’ என்னும் ஒரு அதிகாரத்தை படைத்துள்ளார். கழி என்னும் உரிச்சொல் மிகுதியைக் குறிக்கும் என்பதையும், தலைவி எப்போது ‘காமம் மிக்க கழிபடர் கிளவியை’ வெளிபடுத்துவாள் என்பதையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதையே அவர் ‘அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


ஆறாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் இறையனார் அகப்பொருள் உரையில் களவு-சூத்திரம் 30-இல், “காம மிக்க கழிபடர் கிளவியும் காப்புச் சிறைமிக்க கையறு கிளவியும் ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவியும் இரவினும் பகலினும் நீவரு கென்றலும் கிழவோன் தன்னை வாரல் என்றலும் தன்னுள் கையா றெய்திடு கிளவியும் அன்ன மரபின் பிறவும் தொகைஇத்தன்னை அழிந்த கிளவி எல்லாம் வரைதல் வேட்கைப் பொருள என்ப” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


நாச்சியார் திருமொழியில், கண்ணனை அடைய வேண்டும் என்னும் வேட்கையை வெளிபடுத்துகிறாள் ஆண்டாள், அது தமிழ் இலக்கிய மரபின் ஓர் கூறாகும். இதைக் கொச்சைப் படுத்தி எழுதியிருப்பதுதான் விந்தையிலும் விந்தை!. வைணர்களின் கொள்கைப்பபடி அந்தக் கண்ணன்தான் அனைவரும் பூசிக்கத்தக்க நிலையில் திருவரங்கத்தில் ‘கிடந்ததோர் கிடைக்கையாய்’ இருந்து வருகிறான்.


இந்தத் தமிழாசிரியர், கடவுள் வேறு, தெய்வம் வேறு, என்று பிதற்றியுள்ளார். அகராதிகளுக்கு முன்னோடி நிகண்டுகள். அதை இவர் அறிவார். ‘செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி’ நான்காம் மண்டலம் மூன்றாம் பகுதி பக்கம் 14-இல், தெய்வம் – 1. கடவுள் (சூடா), எணிஞீ, ஈஞுடிtதூ. “தெய்வ முணாவே” (தொல்.பொருள்.18). 2. தெய்வத்தன்மை, ஈஞுதிடிணஞு ணச்tதணூஞு. “தெய்வமே கமழுமேனி” (சீவக. 1718). 3. தெய்வத்தன்மையுள்ளது. tடச்t தீடடிஞிட டிண் ஞீடிதிடிணஞு. “தெய்வத்தாற் கூறாயோ” (திணைமாலை 90).

கடவுள் – உலகத் தோற்றத்திற்கான அடிப்படைக் காரணமாகக் கருதப்படும் நம்பப்படும் ஆற்றல் வாய்ந்த சக்தி, தெய்வம். இறைவன்.

“தெய்வம் கடவுள் என்ற இரண்டுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு. தெய்வம் என்பது பழம்பொருள், பழகிய பொருள். கடவுள் என்பது பரம்பொருள், பழகாத பொருள்” என்பது வைரமுத்துவின் ஒரு புதுவிளக்கம். புதுக்கவிதை போல ஓர் மரபு மீறிய விளக்கம். வைரமுத்துவை விட பன்மடங்கு அறிவுடையார் நிகண்டுகளைப் படைத்தவர்கள். அவர்கள் சொல்லும் பொருளே ஏற்றுக் கொள்ளப்படும்.


“வர்க்க பேதம் ஒழியாமல் சாதிபேதம் ஒழியாது என்ற பிற்கால பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை” என்று இவர் பிதற்றியுள்ளார். இது எப்படியென்றால் சாதிகள் ஒழிக்கப்படவேண்டும் ஆனாலும் பல நூற்றாண்டுகளுக்கு, இடஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் தொடர வேண்டும் என்ற முரண்பாடான வாத்திற்கு ஒப்பானது. வர்க்க பேதம், சாதிபேதம் எல்லாம் மக்களை மதி மயக்குவதற்கு உருவாக்கப்பட்ட சொற்களாகும். எட்டாம் நூற்றாண்டில் இது போன்ற எண்ணங்கள் கிடையாது அனைவரும் சமுதாயத்துக்குரிய தம் கடமைகளைச் செய்துவந்தனர்.


தச்சர் என்ற ஒரு வகுப்பினர் இல்லையென்றால் வீடு கட்ட முடியாது. முடி திருத்துபவர் என்ற பிரிவினர் இல்லையென்றால் அனைவரும் ஆதிவாசிகள் போன்று தோற்றமளிப்பர். அந்தணர் என்ற வகுப்பினர் இல்லையென்றால் கோள்களின் நிலையை எடுத்துக் கூறுபவர் யார்? ஒவ்வொருவர் உட்கொள்ளும் உணவுப்பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழிபாட்டு முறைகள் இவற்றின் அடிப்படையில் குழுக்களாகப் பிரிந்தனர். அந்தக் குழுக்களின் இனப் பெருக்கங்கள் தனித்தனியே வாழலாயின.


அப்படித்தான் இந்தப் பிரிவுகள் தோன்றினவே ஒழிய, வேறு காரணங்கள் இல்லை. சமுதாயத்திற்கு அனைத்து மக்களின் செயல்பாடுகள் தேவை, ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால் உழன்றும் உழவே தலை’ என்பது வள்ளுவர் வாக்கு. ஆகவே ஆண்டாளின் பெருமையை விளக்குவதற்கு, வர்க்க, சாதிப்பிரிவுகள் பற்றிய குறிப்பு தேவையற்றது.


பக்தனுக்கு கடவுள் கல்லல்ல. அது மந்திரங்களால் ஜீவனூட்டப்பட்ட ஓர் தெய்வம். பல பெரியோர்களுக்கு அது நேரே காட்சியளிக்கும். நம்முடைய ஊனக்கண்களுக்கு Violet to Red வரையிலான ஒளிக் கற்றைகளைக் கொண்டு பொருள்களைப் பார்க்க முடியும். Ultra Violet Infra Red X Rays ஆகியவற்றைப் பார்க்கமுடியாது. அதனால் அதை இல்லையென்று சொல்ல முடியுமா? கடவுளர்க்கும், ஆண்டாளுக்கும் ஆழ்வார்களுக்கும் கோயில்களில் இருக்கும் சிலைகள் கல்லல்ல. பக்தர்களுடைய பார்வையில் அவை உயிருள்ள எல்லா குணநலன்களையும் கொண்ட கருணையின் வடிவாக விளங்கும் ஓர் தெய்வ உரு.


இதைப் புரிந்து கொள்ள வைரமுத்து (Thagarasippi) வால் முடியாது.


ஆகவே எப்படி ஆண்டாள் கல்லான கடவுளைக் கைப்பிடித்தாள் என்று பிதற்றியுள்ளார். எங்கள் பெரியோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இவ்வாறு கூறிவருகிறார்கள் நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம் அது எங்கள் நம்பிக்கை. நீ கொண்டாடும் மற்றைய மதத்தினரிடம் இது போன்ற கேள்வியை எழுப்பி இருப்பாயா? நீ கேள்வி எழுப்பிய சில மணித்துளிகளிலே உன் வீடும், உன் உயிரும் இந்த உலகில் நிலைபெற்றிருக்காது.


அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வைணவர்களின் உணர்வை நீ சீண்டிப்பார்க்கிறாய், “ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர், கருநாய் கவர்ந்த காலராக” ஆவர் என்பது வேளாளர் குல திலகமும் எங்கள் குருவுமான நம்மாழ்வார் வாக்கு. இன்று நீ புகழின் உச்சியில் இருக்கலாம், நீ அடையப்போகும் துன்பங்களுக்கு எல்லையே இல்லை. இது வைணவர்கள் உனக்குக் கொடுக்கும் சாபம்.


“பாகவத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒருவேறுபாடு உண்டு” என்பது உன்னுடைய பிதற்றல்களில் ஒன்று. பாகவதத்தில் காத்தியாயினி (கார்த்தியாயினி என்பது தவறு) நோன்பு கண்ணனை அடைவதற்காக நோற்கப்பட்டது. திருப்பாவையிலும் அதேபோன்று (அனுகரித்து) கண்ணனை அடைவதற்கே பாவை நோன்பு கொண்டாடப்பட்டது. பேரறிஞர்களான வைணவ உரை ஆசிரியர்கள், பெரியவாச்சான் பிள்ளை, அழகியமணவாளப் பெருமாள் நாயனார், ஆயி ஆகியோர்கள் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.


(இவர்களுடைய பரந்த அறிவிற்கு முன்பு நீ ஒரு மின்மினி பூச்சி, சினிமாப் பாடலில் காமச்சுவைத் தோன்ற, பெண்களின் அங்கங்களை விவரிக்கும் உனக்குத் திருப்பாவை மற்றும் நாச்சசியார் திருமொழியின் ஆழ்ந்த பொருள் நயம் எப்படிப் புலப்படும். உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி கருடனாக முடியாது. இனியேனும் வைணவ இலக்கியங்களைப் பற்றிப் பேசும் போது, கற்றறிந்த வைணவர்களிடம், பொருள் நயங்களைக் கேட்டறிந்த பிறகு பொருள் சொல்ல முற்படுவீராக! ஆகையால் வைணவ ஆசார்யர்கள் வலிந்து பொருள் சொல்கிறார்கள் என்று கூறாதே.


வள்ளி திருமணத்தில் முருகன் நேரே வந்ததுபோன்று, சீதையையும், ருக்மிணியையும், ஸ்ரீராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதாரம் எடுத்து திருமணம் செய்து கொண்டான் எங்கள் கடவுள். ஆண்டாளுடைய கண்களுக்குக் கண்ணனாகக் காட்சியளித்து அவளை ஏற்றுக் கொண்டான் என்பதை மறுப்பதற்கு நீ யார்? நீ தெய்வ சக்தி படைத்தவனா? ஓர் அற்ப மானுடனான நீ, கடவுள் நேரில் வந்தானா? என்று கேட்பதற்கு என்ன தகுதியுண்டு. மானிடர்கள் இறை உருவத்தோடு கலந்ததற்கு ஆவணங்கள் உள்ளன. தியாக ப்ரஹ்மத்திற்கு இறைவன், இராமன், சீதை, இலக்குவன், மாருதி ஆகியோரோடு நேரில் வந்ததை 19-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியாக இன்றும் பேசப்படுகிறது. பக்தனுடைய கண்ணோட்டம் வேறு, நாத்திகனுடைய கண்ணோட்டம் வேறு.

சமூக ஊடகத்தில் இருந்து எடுக்கப்ப்பட்டது

Leave a Reply