பாஜக தலைமை யகத்தில் திபாவளி மிலான் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்தவிழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

இது நமக்கு சவாலான நேரம். இந்தநேரத்தில் நாம் நிறைய காரியங்கள் செய்யவேண்டியுள்ளது. அரசியல் கட்சிகளின் ஜனநாயக முறைகள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரித்த அனைத்து ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்தநன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

இந்ததிட்டத்தின் நற்பண்புகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அது போல அனைத்து விவகாரங்களிலும் உள்ள நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.

ஏனெனில் தேசத்தின் வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்கு மிகமுக்கியமானது. அரசு சார்ந்த மக்கள் நலத் திட்டங்களை நாட்டுமக்களிடம் அவர்கள்தான் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

Leave a Reply