தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், தை முதல்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலை யிலேயே குளித்து, புத்தாடை அணிந்து வீட்டில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். 

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  பிரதமர் மோடியும்  வாழ்த்துச்செய்தியை பகிர்ந்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் தனது பொங்கல்வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “ இத்திரு நாள் அனைவரது  வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply