நடப்பாண்டில் இந்தியா, விளையாட்டு, கட்டமைப்பு, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அபாரவளர்ச்சி பெற்றுள்ளதாகவும், இந்தவளர்ச்சி வரும் ஆண்டிலும் மேலும்தொடரும் என்றும் பிரதமர் மோடி இன்றைய ரேடியோ உரையில் கூறினார்.

 

இந்த ஆண்டின் கடைசி மற்றும் 51வது மன்கி பாத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 2018 ம் ஆண்டில்தான், உலகின் மிகப் பெரிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரவசதி வழங்கப்பட்டது. 95 சதவீத கிராமங்கள் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மை படுத்தப்பட்டன. அமைதியான முறையில், நாட்டுமக்களை வறுமையிலிருந்து அகற்றும் இந்தியாவின் நடவடிக்கையை உலக அமைப்புகள் அங்கீகரித் துள்ளன.
இந்தியாவின் ஒற்றுமைக்காக பாடுபட்ட உலகின் பெரிய சர்தார் வல்லபாய்படேல் சிலை திறக்கப்பட்டது. அசாம், அருணாச்சல்லை இணைக்கும் ஈரடுக்கு பாலம் திறந்து வைக்கப்பட்டது.எளிதாக தொழில் துவங்கு வதற்கான பட்டியலில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு கூட்டுமுயற்சியே காரணம். கடற்படையை சேர்ந்த பெண்கள் உலகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் வளர்ச்சிபயணம் வரும் ஆண்டிலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

சென்னையை சேர்ந்த டாக்டர் ஜெயச்சந்திரன், சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். நோயாளிகளுக்கு சிகிச்சைதர எப்போதும் ஆர்வத்துடன் இருந்தார். பணம் இல்லாமல் தவித்த முதிய நோயாளிகளுக்கு தனது சொந்தபணத்தையும் வழங்கினார். அவரை பற்றிய செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன். கர்நாடகாவை சேர்ந்த பெண் நரசம்மாவும், 1,500 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம் பார்த்து,ஏழைகளுக்கு சேவைபுரிந்துள்ளார். கொரியாவில் நடந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், காஷ்மீரை சேர்ந்த ஹனயா நிசார் தங்கப்பதக்கம் வென்றார். புனேவை சேர்ந்த வதங்கி குல்கர்னி, தினமும் 300 கி.மீ., என 159 நாட்கள் சைக்கிளில் உலகம் முழுவதும் பயணம்செய்த முதல் ஆசிய பெண் என்ற சாதனை படைத்தார். பானிபட்டை சேர்ந்த ரஜனி என்ற 16 வயது பெண், ஜூனியர் பெண்கள் குத்துச்சண்டையில் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

நமது பண்டிகைகள் கலசாரத்தையும், விவசாயத்தையும் சார்ந்திருக்கும். மக்களுக்கு உணவளிக்கும் இந்திய விவசாயி களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஜன.,15ல் கும்பமேளா பிரயாக ராஜில் துவங்குகிறது. இந்தியாவின் நம்பிக்கைக்கு உதாரணமாக கும்பமேளா உள்ளது. இளைஞர்கள், இதன்மூலம் இளைஞர்களுக்கு அனுபவம் கிடைக்கும். கும்பமேளா ஏற்பாடுகளை பல்வேறு நாட்டுதூதர்கள் பார்வையிட்டு சென்றனர். பண்டிகைகளில் எடுக்கப்படும் புகைப் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன்மூலம், இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் கலாசாரத்தை அனைவரும் காணமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply