இந்தியாவில் 760 பல்கலைக் கழகங்கள் இருந்தாலும், அவை உலகத்தரம் வாய்ந்த, தலைசிறந்த கல்வி மையங்களாகத் திகழவில்லை என்பது வேதனை யளிக்கிறது. 

நமது நாட்டில் நல்ல பல்கலைக் கழகங்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அதைவிட தலை சிறந்த பல்கலைக்கழகங்களாக அவை இருப்பது அவசியம். உயர் கல்வியின் தரத்தை அதிகரிப்பது, கற்பிக்கும் திறனை மேம்படுத்துவது, சம்பந்தப்பட்டதுறைகள் மற்றும் அந்தத்துறைகள் சார்ந்த கல்வி ஆய்வுகளுக்கு இடையே மிகச்சிறந்த தொடர்பை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டால் தான், இந்தியப் பல்கலைக் கழகங்கள் சர்வதேசத் தரத்திலான தலை சிறந்த கல்வி நிலையங்களாக முடியும்.


அரசு பல்கலைக்கழகங்களானாலும், தனியார் பல்கலைக் கழகங்களானாலும், அவை தங்கள் மாணவர்கள் சர்வதேசளவில் எந்தச்சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்களது திறமையை பட்டை தீட்டவேண்டும்.


இந்தியாவில் வீட்டுவசதி, சாலைகள் மற்றும் ரயில்பாதைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை அமைத்தல் ஆகிய பல்வேறுபணிகளுக்கும் நிதி தேவைப் படுவதால், கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய மற்றும் மாநிலஅரசுகளால் 6 சதவீதத்துக்கும் மேல் நிதி ஒதுக்கீடுசெய்ய முடியாத நிலை உள்ளது.


பிரதமரின் முயற்சிகளால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, கல்விக்காக இன்னும் கூடுதல் நிதிஒதுக்கப்படும்; அனைவருக்கு தரம்வாய்ந்த கல்வி கிடைக்கும்

ஆந்திரப் பிரதேச தலைநகர் அமராவதியின் ஐனவோலு பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலூர் தொழில்நுட்பக் கல்வியக (விஐடி) வளாகத் திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது:.

Leave a Reply