இந்தியாவின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சிசெய்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

லக்னோவில் ஒரு பத்திரிகை ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் பேசியவர், தீவிரவாத செயல்கள் தற்போது குறைந்துள்ளதற்கு, நம்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் முக்கியப்பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். ஜம்முகாஷ்மீரில் தற்போது நிலைமை சீரடைந்து வருவதாகவும் அவர் கூறினார். ஜம்முகாஷ்மீரின் பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம், துணைராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, மற்றும் உளவுத்துறை ஒருங்கிணைந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 1995 ஆம் ஆண்டு முதல், 86,000 தீவிரவாத்த் தாக்குதல்கள் நடைபெற்றதாகவும், கடந்த ஓராண்டில் இது பெருமளவு குறைந்து ள்ளதாகவும் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Leave a Reply