இஸ்லாம் மதம்தொடர்பாக, 'ஆஷாரா முபாரகா' என்ற நிகழ்ச்சி, ஆண்டுதோறும், ம.பி., மாநிலம், இந்துாரில் நடத்தப்படுகிறது. நேற்று நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
 

அப்போது, அவர் பேசியதாவது: இஸ்லாம் மதத்தைச்சேர்ந்த, போஹ்ரா பிரிவினர், நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பான வகையில் பங்காற்றி உள்ளனர். எல்லாபிரிவு மக்களையும் உள்ளடக்கி, நல்லிணக்கமாக வாழும் வல்லமை உள்ளதால், இந்தியாவின் மகத்தானசக்தியை உலகம் அறிந்துள்ளது.

போஹ்ரா பிரிவு தலைவர், டாக்டர் சையத்னா முபத்தால் சைபுதீனை, ஒருமுறை, விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது, குஜராத்தில் நிலவும் தண்ணீர்பிரச்னை, தடுப்பணைகள் அமைப்பது பற்றி அவரிடம் பேசினேன். பின், குஜராத்தில் ஏராளமான கிராமங்கள் பயனடையும் வகையில், பலதடுப்பணைகளை, சைபுதீன் உருவாக்கினார். இதனால், ஏராளமான கிராமங்களில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.
 

மற்றொரு சந்தர்ப்பத்தில், குஜராத்தில், ஊட்டச்சத்து குறைபாடு குறித்த பிரச்னைக்கு, சைபுதீன் மேற்கொண்ட நடவடிக்கைகள் சிறந்ததீர்வாக அமைந்தன. இமாம் உசேனின் புனிதசெய்தியை பரப்பும் வகையில், போஹ்ரா பிரிவினர் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply