இந்தியாவின் மிகவும் நீளமான ரயில்பாலத்தை டிச.25-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்


வடகிழக்கு மாநிலங்களன அசாம், அருணாச்சல் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்குபகுதிகளை இணைத்து ரயில் பாலம் கட்டும்பணி போகிபீல் என்ற இடத்தில் நடந்து வருகிறது.
4.94 கி.மீ. நீளம்கொண்ட இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலம் ஆகும்.1997-ல் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டு 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் தொடங்கி வைக்கப் பட்டது. கடந்த டிசம்பர் 3-ம்தேதி பணிகள் நிறைவடைந்தன. வரும் 25-ம்தேதி இப்பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.

 

Leave a Reply