இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையை பொறுத்து கொள்ள முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார். 
 
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷம் எழுப்பிய வர்களுக்கு எதிராக ’கடும் நடவடிக்கை’ எடுக்கப்படும், தேசத்திற்கு எதிரான நடவடிக்கையை  பொறுத்து கொள்ளமுடியாது என்று ராஜ்நாத் சிங் பேசிஉள்ளார். 
 
செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், “இந்தியாவிற்கு எதிரான கோஷத்தை யாராவது எழுப்பினாலும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டு விவகாரத்தில் கேள்வி எழுப்பமுயற்சித்தாலோ, அவர்களை தப்பி ஓட விடமாட்டோம். அவர்களுக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படும்,”
 
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களுக்கு எதிராக “கடும் நடவடிக்கையை” எடுக்க டெல்லிபோலிசிடம் கேட்டுக் கொண்டு உள்ளேன் என்றும் ராஜ்நாத்சிங் கூறிஉள்ளார். 
 
கடந்த செவ்வாய் கிழமை ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் கும்பலாக, இந்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி அப்சல்குரு 2013-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டது தொடர்பாக அரசுக்கு எதிராகவும், இந்தியாவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பி உள்ளனர். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்ககூடாது என்று புகார் அளித்ததும், பல்கலைக் கழக நிர்வாகம் கூட்டத்திற்கான அனுமதியை ரத்துசெய்தது.
 
இருப்பினும், கும்பலாக மாணவர்கள் இந்தியாவிற்கு எதிராக கோஷம் எழுப்பி உள்ளனர். பாரதீய ஜனதா எம்.பி. கிர்ரி மற்றும் அகிலபாரதீய வித்யார்த்தி பரிஷத் கொடுத்த புகாரின்படி டெல்லிபோலீஸ் தேச துரோக வழக்குப்பதிவு செய்து உள்ளது. 
 
இந்திய தாயை அவமானமதிக்கும் எந்த ஒரு செயலையும் பொறுத்துக் கொள்ளமுடியாது என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறிஉள்ளார்.

Leave a Reply