இந்தியாவில் செல்வாக்கு மிக்க தேசிய தலைவர்களில் மோடி முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்க நிறுவனத்தின் கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது.

மோடிக்கு 80 சதவீத புள்ளிகளும், ராகுல் காந்திக்கு 58 சதவீத புள்ளிகளும், சோனியாவுக்கு 57 சதவீத புள்ளிகளும் ஆதரவாக கிடைத் திருப்பதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிட மாகக்கொண்டு இயங்கிவரும் (பிஇடபிள்யூ) என்கிற அமைப்பு பிப்ரவரி முதல் மார்ச் வரை கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்துகணிப்பில் அதில் இந்திய மக்களிடையே செல்வாக்குப்பெற்ற தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பலமாநிலங்களிலும் மொத்தம் 2464 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், 88 சதவீத மக்கள் மோடிக்கு ஆதரவாக ஓட்டளித்து இருக்கிறார்கள்.

இவரைவிட 30 சதவீதம் பின்தங்கி 58 சதவீதம் ஓட்டுகளை பெற்று இருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. அடுத்து 57 சதவீதம் பெற்று காங்கிரஸ் தலைவர் சோனியா 3வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply