இந்தியாவில் பாஜக  பங்களிப்பு இல்லாத மாநிலம் இனி இருக்காது என அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும், உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா இளைஞரணி சார்பில் சென்னையில் கோட்டையைநோக்கி பேரணி நடத்தப்படுகிறது. 


இந்தப் பேரணியின் தொடக்க விழாவில் பேசிய பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படவேண்டும் என வலியுறுத்தினார். 

தமிழக அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் எனத்தெரிவித்த அவர், தமிழக கிராமப்புறங்களில் இருந்து மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 5 சதவிகிதமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். 

முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தமிழகத்தில் விரைவில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாரக இருப்பதாக கூறினார். 

தமிழகத்தில் பாவிகளுக்கு இடம் இருக்கும்பொழுது காவிகளுக்கும் இடம்கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply