வியட்நாமில் நடைபெறும் ஆசியபசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு உச்சிமாநாட்டை முன்னிட்டு சி.இ.ஓ.க்கள் மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டிப்பேசினார்.

“இந்தியா 130 கோடி மக்கள் தொகை கொண்ட இறையாண்மை பொருந்தியதேசம், உலகிலேயெ பெரிய ஜனநாயக நாடு. பொருளா தாரத்தை தாராளமயப் படுத்தியவுடன் இந்தியா அதிர்ச்சியடையக்கத் தக்கவகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்நாட்டின் விரிவாக்கம் பெறும்நடுத்தர மக்களுக்கு புதியவாய்ப்புகள் திறந்துள்ளன.

பிரதமர் நரேந்திரமோடி பரந்து விரிந்த இந்தியாவையும் அதன் மக்களையும் ஒருங்கிணைக்க பணியாற்றி வருகிறார். இதில் அவர் வெற்றியும்பெற்று வருகிறார்” என்று புகழ்ந்து பேசினார்.

மேலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, ஜப்பான், ஆகியநாடுகளையும் பாராட்டினார். வியட்நாமைக் குறிப்பிட்டு இன்று நாம் எதிரிகள்அல்ல நாம் நண்பர்கள் என்றார்.

Leave a Reply