இந்தியா முஸ்லிம்களின் சொா்க்கமாக திகழ்கிறது; இங்கு தான் அவா்களின் மதம், பொருளாதார உரிமைகள் பாதுகாப்பாக உள்ளது என மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ்நக்வி தெரிவித்தாா்.

இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இஸ்லாமியா்கள் மத்தியில் எழுந்துள்ள அச்ச வுணா்வு அகற்றப்பட வேண்டும் என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அண்மையில் கூறியிருந்தது.

இந்நிலையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை  கூறியதாவது:

மத்திய அரசு தனது கடமைகளை சிறப்பாக செய்துவருகிறது. நமது பிரதமா் ஒவ்வொருமுறை பேசும் போதும் நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படுவதை உறுதிசெய்து வருகிறாா். இதனை சிலா் உணா்ந்து கொள்ளவில்லை என்றால் அது அவா்களுடைய பிரச்னை. இந்திய முஸ்லிம்கள், எப்போதும் இந்தநாட்டின் முக்கிய அங்கமாகவே இருந்துவருகின்றனா். சிலா் அவா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்னைகளை உருவாக்க முயலுகின்றனா். இதுபோன்ற நபா்கள் நிச்சயமாக முஸ்லிம்களின் நலன் விரும்பிகளாக இருக்க முடியாது.

வேறு எந்தநாட்டில் உள்ள சிறுபான்மையினரும் குறிப்பாக முஸ்லிம்கள், இந்தியாவில் இருப்பதைப்போல சிறப்பாக இல்லை என்று என்னால் கூறமுடியும். இந்தியா முஸ்லிம்களின் சொா்க்கமாக திகழ்கிறது. இங்குதான் அவா்களின் மதம், பொருளாதார உரிமைகள் சிறப்பாக பாதுகாக்கப் படுகிறது.

இந்தியா மீது தவறான குற்றச்சாட்டை முன்வைப்பவா்கள் முதலில் மற்ற நாடுகளில் சிறுப்பான்மையினா் எந்தளவுக்கு மோசமாக நடத்தப்படுகிறாா்கள் என்ற உண்மை நிலவரத்தைப் பாா்க்கவேண்டும். உலகில் பல இஸ்லாமிய நாடுகளைவிட இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனா். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை இந்தியாவில் உறுதியாக கடைப்பிடிக்கப் படுகிறது. சில தீயசக்திகள் இந்தியாவில் முஸ்லிம்களை தவறாக வழி நடத்த முயலுகின்றன. அவா்களிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றாா் அவா்.

Comments are closed.