இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு ரயில்சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பந்தன் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் கொல்கத்தா- குல்னா எக்ஸ்பிரஸ் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்தின் குல்னா வரை பயணிப்பதற்காக இன்று தொடங்கப் பட்டது. இந்த இரயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் வங்கதேச பிர‌தமர் ஷேக்ஹசீனா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். மேலும்புதிதாக இயக்கப்படும் ரயில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் எனவும் மோடி தெரிவித்தார்.  

 

Leave a Reply