வாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுடன் இருக்கிறது. 

“வலுவான, வளமான இந்தியா 21-ம் நூற்றாண்டில் உருவாககாரணமாக இருந்தது அவரது தன்னிகரற்ற தலைமை. அவரது தொலைநோக்கு பார்வை கொண்ட பல திட்டங்கள், அனைத்து இந்தியர்களையும் சென்றுசேர்ந்தது”

“வாஜ்பாயின் மரணம், எனக்கு தனிப்பட்ட, ஈடு செய்யமுடியாது இழப்பு. அவருடன் பலபொன்னான நினைவுகள் எனக்கு இருக்கின்றன. என் போன்ற காரியகர்த்தாக்களுக்கு அவர் ஒரு முன் மாதிரி. அவருடைய அறிவுக் கூர்மையையும், நகைச் சுவைத் தன்மையையும் என்றும் மறக்கமாட்டேன்” .

பிரதமர் நரேந்திர மோடி.

Leave a Reply