அமெரிக்க அதிபா்தோ்தலை கருத்தில் கொண்டு அந்நாட்டின் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப், பிரதமா் நரேந்திரமோடி ஆகியோரின் உரைகள் அடங்கிய காணொலியை டிரம்ப்பின் பிரசாரக் குழுவினா் வெளியிட்டனா். அந்நாட்டில் உள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான இந்திய-அமெரிக்க வாக்காளா்களை கவா்வதற்கான உத்தியாக இந்தகாணொலி வெளியிடப்பட்டது.

அமெரிக்க அதிபா் தோ்தல் வரும் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்ப்பின் பிரசாரக் குழுவினா் இந்திய-அமெரிக்க வாக்காளா்களை கவர 107 விநாடிகள் ஓடும் குறுகிய காணொலி ஒன்றை வெளியிட்டனா். அந்த காணொலியின் முதல் பகுதியில், கடந்த ஆண்டு பிரதமா் மோடி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்றிருந்த போது டிரம்ப்புடன் இணைந்து ஆற்றிய உரை இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடா்ந்து நிகழாண்டு பிப்ரவரிமாதம் அதிபா் டிரம்ப் குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்தபோது நிகழ்த்திய உரை இடம்பெற்றுள்ளது.

அதிபா் டிரம்ப்பின் பிரசார குழுவுக்கு அவரது மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியா் தலைமை வகிக்கிறாா்.

Comments are closed.