முக்கிய நகர்வாக மத்தியபாதுகாப்பு அமைச்சகம் இன்று இந்தியகடற்படைக்கு ரூ. 21,738 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்திற்கு அனுமதிவழங்கி உள்ளது என அரசு தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு உபகர ணங்களை வாங்குவது தொடர்பான கவுன்சில் கூட்டம் மத்திய பாதுகாப்புதுறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல்வழங்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 16 ஹெலிகாப்டர்கள் உடனடியாக பயன் படுத்தும் நிலையில் வாங்கப்படும் எனவும், மீதம் 95 ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply