இந்தியமுஸ்லீம்கள் ராமர் கோவிலை இடிக்கவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் பல்கர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மோகன் பகவத் கூறியதாவது:–-

ராமர் கோவிலை இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் இடிக்க வில்லை. இந்தியர்கள் ஒரு போதும் இத்தகைய செயலில் ஈடுபடமாட்டார்கள். இந்தியாவை பலவீனப்படுத்த வெளிநாட்டு சக்திகள் கோவிலை இடித்தனர். எனவே, ராமர் கோவிலை மீண்டும் அதேஇடத்தில் கட்டுவது என்பது தேசியபொறுப்பு ஆகும். ராமர்கோவிலை கட்ட நாங்கள் எந்த போராட்டத்திற்கும் தயாராக உள்ளோம். ராமர்கோவில் மீண்டும் கட்டப் படவில்லையென்றால், நமது கலாச்சாரம் வேரோடு துண்டாகும் நிலை ஏற்படக் கூடும்.

எது இடிக்கப் பட்டாலும் மீண்டும் அதே இடத்தில் கட்டுவதற்கு நமக்கு உரிமை உள்ளது. ஏனெனில், இதுவெறும் கோவில் மட்டும் இல்லை. நமது கலாச்சாரத்தின் அடையாளம் என்றார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவிலை கட்டவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 13 வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. இந்தவழக்கில், உச்சநீதிமன்றம் இறுதி விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Reply