இந்திய ராணுவத்தில், மிகப் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தில், 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக ராணுவத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக, மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இந்திய ராணுவத்தின் திறனைமேம்படுத்த, 99 சீர்திருத்தங்களை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஷேகத்தர் குழுசார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.


அவற்றில், 65 பரிந்துரைகளைச் செயல்படுத்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது அதில் முக்கியமாக, ராணுவ வீரர்கள், அதிகாரிகள் உட்பட 54,000 பேர் வேறுபணிகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர். மேலும், ராணுவத்தில் புதிதாக உயரதிகாரிகள் பதவியும் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply