இந்திய ராணுவத்துக்கு சுமார் ரூ.15,000 கோடி மதிப்பில் புதிய ஆயுத தளவாடங்களை கொள்முதல்செய்ய பாதுகாப்புதளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.


தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தலைமையில், பாதுகாப்பு தளவாடகொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் ரூ.1,819 கோடி மதிப்பில் இலகுரக இயந்திரத்துப்பாக்கிகளை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலில் விலைக்குவாங்கி, பிறகு அதை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின் கீழ், இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது.


பாதுகாப்புப் படைகளுக்கு தாக்குதல் ரக ரைஃபிள்களை 7.4 லட்சம் எண்ணிக்கையில் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ரைஃபிள்களை, இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட இருக்கிறது. இவை, ஆயுத உற்பத்திவாரியம் மற்றும் தனியார் பாதுகாப்புத்தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் ரூ.12,280 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட உள்ளன.


இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தொலை தூரத்தில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் நவீனஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை 5,719 எண்ணிக்கையில் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இதற்கு ரூ.982 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேசளவிலான ஒப்பந்தப் புள்ளி விடுவதன்மூலம், இந்த ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை வாங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அதேநேரத்தில், ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்களை இந்தியாவிலேயே முழுவதும் தயாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Leave a Reply