ஏற்கனவே, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து நாடுமுழுவதும் 100 ரெயில் நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட்வசதியை வழங்கி வருகிறது இந்திய ரெயில்வே. இந்நிலையில், தற்போது இந்தியரெயில்வேயின் பாரம் பரியத்தை உலகம் முழுவதும் பிரபலமாக்க கூகுள் நிறுவனத்துடன் மீண்டும் இணைகிறது.

பாரம்பரியமிக்க பழைய இரும்பு ரெயில்பாலங்கள், நீராவி ரெயில் என்ஜின்கள்,  கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள், ரெயில்வே அருங்காட்சி யகங்கள் போன்றவற்றை டிஜிட்டல் தளத்தில் உலகமக்கள் பார்வைக்கு கொண்டுசெல்ல கூகுள் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது மத்திய அரசு. இதுதொடர்பாக, தேசியரெயில்வே அருங்காட்சியகம் மற்றும் கூகுள் நிறுவனத்தின் லாபநோக்கில்லாத அமைப்பான கூகுள் கலாச்சார நிறுவனத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இவ்வாறு டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டபின்பு இந்திய ரெயில்வேயின் பாரம்பரியமிக்க இடங்கள் சிறந்த சுற்றுலா தலமாகமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply