மாநிலத்தின் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்து தற்போது எக்ஸிட்போல் வெளிவந்து கொண்டு இருக்கிறது. முதல்கட்ட கணக்கெடுப்பில் பிஜேபி முன்னிலையில் உள்ளது,

இந்திய வங்கிகளில் குவிந்து கிடக்கும் வராக் கடனுக்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் ஆட்சிதான் என்றும், இதுவே இக்கட்சியின் மிகப்பெரிய ஊழல் என்றும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வங்கிகளை வற்புறுத்தி குறிப்பிட்ட கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் கடன்கொடுத்துள்ளனர் எனவும் மோடி கூறினார். காமன்வெல்த், 2ஜி, கோல் ஆகியவை காங்கிரஸ்செய்த மிகப்பெரிய ஊழல்களில் சில என FICCI அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேசினார்.
 
இந்திய வங்கிகள் தற்போது 7 லட்சம்கோடி ரூபாய் வராக்கடனில் உள்ளது, இதுவே தற்போது வங்கிகளுக்கு பெரிய அளவிலான நஷ்டத்தையும் அளித்தும், வர்த்தகத்தை செவ்வெனச்செய்ய முடியாமல் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது.
 
இந்த வராக் கடன்களையே கடந்த 3 வருடத்தில் 21 துறைகளில் 87 சீர்திருத்தங்கள் செய்யப் பட்டது. இதனால் உலகவங்கியின் எளிமையாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகள் பட்டியலில் 142இடத்தில் 100வது இடத்திற்கு வந்தோம் என மோடி கூறினார்.
 
தற்போது மத்திய அரசு வங்கி அமைப்புகளை உறுதி யாக்கும் வகையில் பல முக்கிய பணிகளைச் செய்துவருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் இதனைத்திருத்தி கூறி பொய்யான பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
 

FRDI மசோதா குறித்துப் பேசிய மோடி, திவாலாகும் வங்கிகளில் இருக்கும் மக்களின் வைப்புகளைக் காக்கும்வண்ணம் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
 
 

 

Leave a Reply