மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவதால், ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க இயலவில்லை. இதற்கிடையே, இந்தவிழா குறித்து அமித்ஷா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-

இந்த நாள், வரலாற்று சிறப்புமிக்க, பெருமைக்குரிய நாள். ராமர்கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம், இந்திய வரலாற்றில் ஒருதங்க அத்தியாயத்தை பிரதமர் மோடி எழுதி உள்ளார். ஒருபுதிய சகாப்தத்தின் தொடக்கத்துக்கு கட்டியம் கூறுவதாக இது அமைந்துள்ளது. ராம பக்தர்களின் நூற்றாண்டு காலதியாகம், போராட்டம் ஆகியவற்றின் விளைவு தான், இந்த கோவில் கட்டுமானம். பிரதமர் மோடியின் வலிமையான, உறுதியான தலைமையை இது உணர்த் துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.