ஜெயலலிதா இறந்தபின்பு வெற்றிடத்தை நிரப்ப பலர் முயற்சிசெய்து வருகிறார்கள். ஆனால் அதை நிரப்ப முடியவில்லை. திரைப்படத் துறையில் இருந்தும் அந்த வெற்றிடத்தை நிரப்ப பலர்முயற்சி செய்கிறார்கள்.

ஒரு வி‌ஷயத்தில் கருத்து தெரிவிப்பது என்பது நடை முறையில் உள்ளது. அதற்கு மாற்றுகருத்து தெரிவிப்பதும் சகஜம்தான். இதில் சகிப்புத் தன்மை முக்கியம்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அடுத்து “இந்துதீவிரவாதம்” என்ற வார்த்தையை நடிகர் கமல்ஹாசன் பயன் படுத்தி இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு கமல்ஹாசன் உரியவிளக்கம் அளிக்க வேண்டும்.

“இந்து தீவிரவாதம்” என்றசொல் ‘சூடான ஐஸ்கிரீம்‘ என்ற வார்த்தையை போல ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது ஆகும். இந்து சமயம் தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்ளாது.

ஊழல் மிகுந்த தமிழக அரசை பின்னால் இருந்து பா.ஜனதா இயக்குகிறது என்பது பொருத்த மற்றது, கற்பனையானது. ஊழல் அற்ற அரசுதான், நேர்மையான அரசு தான் பா.ஜனதா அரசு. அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்தியில் பா.ஜனதா தான் ஆட்சியில் இருக்கும்.

வருகிற டிசம்பருக்குள் தமிழக அரசு கலைக்கப் படும் என்று டி.டி.வி.தினகரன் கூறி இருப்பது, அவரது சொந்தகருத்தாகும். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்ட சபைக்கும் தேர்தல் வர அதிக வாய்ப்பு உள்ளது.

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. ராஜபாளையத்தில் நிருபர்களிடம் கூறியது:-

 

Leave a Reply