இந்து கடவுள்களைப்பற்றி அவதூறாக பேசிய கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது புகார் செய்யப் பட்டுள்ளது.

தூத்துக் குடியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாதளவுக்கு தமிழகத்தில் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கோயில்கள்தான் சாத்தான்களின் அரண்கள்'' எனப்பேசினார். அவரின் இந்த சர்ச்சைப் பேச்சு குறித்த வீடியோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவியது. மோகன் சி லாசரஸின் இந்த சர்ச்சை பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இது தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து பொள்ளாச்சி, கோவை- கருமத்தம்பட்டி மற்றும் சூலுார் காவல் நிலையங்களில் புகார் செய்யப் பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்செய்யப்பட்டது.. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply