இமயமலை தொடர்களும் மேற்குத்தொடர்ச்சி மலைகளும் இந்த தேசத்தின் மலைகள்தான்! கங்கை காவிரி பிரமபுத்திரா கிருஷ்னா போன்ற நதிகள் இந்ததேசத்தின் நதிகள்தான்! சைவம் வைணவம் சீக்கியம் புத்தம் உள்ளிட்ட இந்துமதம் இந்த தேசத்தின் மதம்தான்!  – இவையெல்லாம் மறுக்கமுடியாத உண்மைகளாகும்!

 

     இவையெல்லாம் உண்மையாக இருந்தாலும், இமயமலையின் சிறப்புகளை நான் மறுக்கிறேன், கங்கை புனிதனானது என்பதை நான் ஏற்பதிற்கில்லை, இந்துமதத்தை நான் வெறுக்கிறேன், என்றெல்லாம் சொல்பவன் இந்தியனாக இருக்கமுடியாது! பிறப்பால் இந்தியனாக இருந்து, இத்தகைய கருத்துடையவன் தேசத்துரோகியே!

 

     மதம் வழிபாட்டுக்கானதுதான், ஆனால் அந்த வழிபாடு தேச ஒற்றுமைக்கானது! ஒருவன் ’நான் இந்து இல்லை’ என்று கூறும்போது வழிபாட்டைப் பொறுத்தமட்டில் பிரச்சனை இல்லை! ஆனால் தேசப்பக்தியைப் பொறுத்தமட்டில்?

 

     “ஒருவன் மதம்மாறி போனால், எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிடுகிறது” – என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளதை இங்குநாம் நினைத்துப்பார்க்கவேண்டும்!

 

     இந்துவாக வாழ்வது தேச ஒருமைப்பாட்டுக்கானது அல்ல, என வாதிடுவதே தேசத்துரோகமாகும்! ’இந்த குடும்பத்தை நான் மதிக்கிறேன் ஆனால் அம்மாவை கொலை செய்வேன்’, என்று ஒருவன் சொன்னால் அது எந்த அளவுக்கு குற்றமோ, அந்த அளவுக்கு குற்றமாகும், ’எனக்கு நாட்டுப்பற்று இருக்கிறது, ஆனால் நான் இந்துமதத்தை அழிக்கும் செயலில் ஈடுபடுவேன்’, என சொல்வது!

 

     வழிபாட்டுக்காக மதம்மாறுகிறவர்களைவிட  பணத்திற்காகவும் தேசத்துரோகத்திற்காக மதம் மாருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது! தேசத்துரோகத்திற்காக மதம் மாறுகிறவர்களில் பலர் தங்களை கிருஸ்தவர் அல்லது முஸ்லீம் என காட்டிக்கொள்லாமல் இந்துவாக காட்டிக்கொண்டே செயல்படுகிறார்கள்! அவர்களின் இலக்கு அதிகமான இந்துக்களை மதம் மாற்றுவது! இந்துவாக காட்டிக்கொண்டு பேசினால்தான் நம்மைப்போல ஒரு இந்துவே சொல்றானே நாம் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்! என்று சாதாரண இந்து கருதுவான் என்பது அவர்களின் திட்டமாக இருக்கிறது!

 

    கிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனிதான் இந்த திட்டத்தை வகுத்துக்கொடுத்து செயல்படுத்தியது! இந்த விசயத்தில் அவர்கள் சாதாரண மக்களையும் வேட்டையாடினார்கள், முக்கியமான பெரும்புள்ளிகளையும் வேட்டையாடினார்கள்! முக்கியமான புள்ளிகள் என்றால் மதமாற்ற வேட்டை வேகமாக நடக்கும் என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது! அவர்களின் வேட்டைக்கு இலக்கான முதல் முக்கியப்புள்ளி ஜவஹர்லால் நேரு! இவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு காந்தியிடமும் இருந்தது! கிழக்கிந்திய கிருஸ்தவ கம்ம்பெனியின் இந்த தாக்குதலால் அந்தகாலத்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டார்கள்! அவர்கள் தங்களை கிருஸ்தவன் என்றோ முஸ்லீம் என்றோ குறிப்பிடாமல் ”மதச்சார்பற்றவன்” என்று குறிப்பிட்டார்கள்!

 

     ஒரு இந்து, ‘நான் இந்து இல்லை’ என சொல்லிக்கொள்வதுதான் ‘நான் மதசார்பற்றவன்’ என்பதன் பொருளாகும்! ஆனால் மதம்மாறி பெயரை மாற்றி வைத்துக்கொண்டபிறகு எவனும் ’நான் மதச்சார்பற்றவன்’ என்று சொல்லமாட்டான்! ’மதச்சார்பற்றவன்’ வேடம் போட்டிருக்கும் எவனும், கிருஸ்தவனாக அல்லது முஸ்லீமாக மதம் மாறியவனிடம்போய் ‘நீ மதச்சார்பற்றவன்’ என்று சொல்லமாட்டான்! இந்துக்களிடம் மட்டும்தான் அந்த தாக்குதல் நடத்தப்படும்! காரணம், இந்துக்களை மதம்மாற்றுவதுதான்  இவர்களின் இலக்கு!

 

     ஆனால் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவுடன் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ‘நான் ஒரு இந்து தேசியவாதி’ என குறிப்பிட்டுச் சொன்னார்!

 

    நேரு காந்தி வரிசையில், ஆனால் அவர்களைவிட இன்னும் அதிகமான அளவில் கிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனியால் பாதிக்கப்பட்டவர்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர், அண்ணாத்துரை, கருனாநிதி போன்றவர்கள். இவர்களைப்போல இன்னும்பலர் இந்துப்பெயர்களை பயன்படுத்திக்கொண்டு இந்துமதத்தை கேவலமாக பேசினார்கள்! இப்படி கேவலமாக பேசுவதை கிருஸ்தவராகவோ முஸ்லீமாகவோ பெயர்மாற்றிக்கொண்டு செய்திருந்தால் அவர்களால் தொடர்ந்து செய்யமுடியாமல் போயிருக்கும்! எனவேதான் அவர்கள் கிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனியின் திட்டப்படி இந்துவாக இருந்துக்கொண்டே இந்துவை தாக்கினார்கள்!

 

    இந்த வரிசையில் இப்போது சோனியா, ராகுல், கெஜ்ஜிரிவால், மம்தா, ஸ்டாலின், வைக்கோ, திருமா வளவன், தா.பாண்டியன்,டி.ராஜ, சீமான், திருமுருகன் காந்தி, மனுஷபுத்திரன்,இந்து ராம், கமலகாசன், விஜய்,விஜயின் தந்தை இப்படியாக இன்னும்பலர் இருக்கிறார்கள்! இவர்கள் எல்லோருக்குமே மாற்றப்பட்ட ஒரு கிருஸ்தவ அல்லது இஸ்லாமிய பெயர் உண்டு! அதை ரகசியமாக வைத்திருப்பார்கள்! சிலருக்கு மதம்மாறிய பெயர் இல்லாமலும் இருக்கலாம்! வைக்கோவை பொறுத்தமட்டில் கோபால்சாமி என்னும் பெயரை வைக்கோ என வைத்துக்கொண்டதே மதமாற்றத்தின்போதுதான்!

 

    கிழக்கிந்திய கம்பெனி இன்று இல்லை! ஆனால் அந்த வேலையை செய்ய பல கிருஸ்தவ மிசினரிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் இருக்கின்றன!  இவற்றிற்கு வெளிநாடுகளில் இருந்து பலகோடி பணம் தவறான வழிகளில் வருகிறது! இப்போது அந்த பணம்வரும் பாதை நரேந்திரமோடியின் நடவடிக்கைகளால் பெரும்பங்கு அடைக்கப்பட்டுள்ளது என்னும் நல்ல செய்தி இருந்தாலும் முழுமையாக தடுக்கப்படவில்லை என்பது கசப்பான செய்திதான்!

 

    இந்துக்கள் யாரும் தங்களை இந்து என பெருமையாக சொல்லிக்கொள்ளக்கூடாது என உத்தரவிடும் வகையில் மதசார்பற்ற என்னும் வார்த்தையை நேருவும் காந்தியும் பிரகடனப்படுத்தினர்! ‘தில்லை நடராஜனையும் திருவரங்கநாதனையும் பீரங்கிவைத்து சுடும் நாள் எந்த நாளோ அதுதான் எங்களுக்கு நல்லநாள்‘ என்று, ஈ.வே.ரா, அண்ணாதுரை, கருனாநிதி, நெடுஞ்செழியன் போன்றோர் பேசினார்கள்! இன்றுவரை திமுகவினர் இப்படித்தான் பேசிவருகிறார்கள்! புதிதாக கோயில் கட்டுவதை குற்றமென சினிமாவில் சொன்ன நடிகனின் தந்தை ஆலய உண்டியலில் பணம்போடுவதை இழிவுபடுத்தி ஒரு பாதிரிபோல் பேசுகிறார்! இந்து அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் திரைப்படத்திற்கு ஒரு நடிகன் ஆதரவு தெரிவிக்கிறார்!

 

     எல்லோருமாக சேர்ந்து மோடி என்ன செய்தாலும் அதை எதிர்க்கிறார்கள்! மோடியை இவர்கள் எதிர்ப்பதற்கு அவர் தன்னை ”இந்து” என காட்டிக்கொள்வதே காரணம்!  ஒரு இந்து தன்னை இந்து என காட்டிக்கொள்ளக்கூடாது என்பதுதான், கிருஸ்தவ மிசினரிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் திட்டப்படி காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், மற்றும் மதம்மாறி தலைவர்கள் மற்றும் நடிகர்களின் கொள்கையாகும்!

 

     ஒரு இந்து “நான் ஒரு இந்து” என்று சொன்னால், இவன் தீவிரவாதி இவனை கொல்லுங்கள் என்பார்கள்! கொலைகளையும் செய்வார்கள்! அதே இந்து மதம்மாறிவிட்டு “நான் ஒரு கிருஸ்தவன், நான் ஒரு முஸ்லீம்” என்று சொன்னால்- ஐயோ பாவம் அவனுக்கு உதவுங்கள் என்று சொல்வார்கள்! இதுதான் இந்த அன்னிய கைக்கூலிகளின் செயலாகும்!

 

     இந்தியா பலமாக இருப்பது என்பது இந்துமதம் பலமாக இருப்பதுதான்! காரணம் இந்துமதம்தான் இந்தியாவை புனிதமாக கருதுகிறது! இந்துக்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு கிருஸ்தவர்களின் மற்றும் முஸ்லீம்களின் எண்ணிக்கையை இந்துக்களின் எண்ணிக்கைக்கு இணையாக மாற்றிவிட்டு ஒற்றுமைப்படுத்துவதென்பது, முடியாத காரியமாகும்! ஏசுவின் ராஜியம் காணவேண்டும், அல்லாவின் ராஜியம் காணவேண்டும் என்பதுதான் அவர்களின் கனவாக இருக்கிறது! அவர்களை ஊட்டி வளர்ப்பது தேசத்தை துண்டாடுவதற்கு சமமாகும்! தேசத்தை துண்டாடுவதற்காகத்தான் அன்னிய சக்திகள் இந்த மதம்மாறிகளை கைக்கூலிகளாக பயன்படுத்துகின்றனர்!

 

  கமலகாசன் ஊழலை ஒழிக்க கட்சி துவங்குகிறாராம் முதலில் நான் முதல்வராக என்று சொன்னார் பின்பு ஊழலை ஒழிக்க என்கிறார்! சரி மோடி என்ன செய்கிறார்? ஊழலைதானே ஒழிக்கிறார்? நீங்கள் ஊழலை ஒழிப்பதாக சொல்லிக்கொண்டு தினகரனை ஏன் ஆதரிக்கிறீர்கள்? ஊழலை ஒழிக்கவேண்டும் என சொல்பவர்கள் ஏன் மோடியை ஆதரிக்கவில்லை? ஊழலை ஒழிப்பது இவர்களின் நோக்கமல்ல! இந்து மதத்தை ஒழிப்பதுதான் இவர்களின் நோக்கம்! இந்துவின் காவலனாக விழங்கும் மோடியை ஒழிக்கவேண்டியது இவர்களின் முதல் கடமையாக இருக்கிறது!  அதற்காக இவர்கள் திருநீறு பூசி குங்குமப்பொட்டும் வைப்பார்கள்!

 

     இந்த வேடதாரிகள் விசயத்தில் தேசப்பக்தர்கள்  எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! பிரதமர் நரேந்திரமோடி இந்திய பொருளாதாரத்தையும் காப்பாற்றுவார், இந்திய பன்பாட்டையும் காப்பாற்றுவார்! பிரதமரை பிந்தொடர்ந்து அவர் திட்டங்களுக்கு ஆதரவு தரவேண்டியது தேசப்பக்தர்களின் கடமையாகும்!

 

நன்றி-    குமரிகிருஷ்ணன்

Leave a Reply