சஷிருய்யாவின் எஸ்ஸார் குழுமம் தன்னுடைய எஸ்ஸார் எண்ணெய் நிறுவனத்தை கிட்டத் தட்ட ஒரு 80,000 கோடிகளுக்கு ரஷியாவின் ராஸ்நெப்ட் குழுமத்திடம் விற்றுவிட்டது…

இதன் வழியாக 70,400 கோடி ரூபாய் கடனை அது திரும்ப அளிக்கும் என கணக்கிடப் படுகிறது. இந்திய கார்ப்பரேட் உலகின் மிகப் பெரும் கடன் திருப்பிசெலுத்தல் இது தான் இதே அளவு வங்கிகடனை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் திரும்பசெலுத்த இருக்கிறது அதற்கான கடன் பத்திரங்களை விற்பனை செய்ய அது தயாராகி விட்டது..

எஸ்ஸார் குழுமத்தின் மொத்த கடன் தொகை 1.35 லட்சம் கோடியாக கணக்கிடப்படுகிறது. எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, ஐடிபிஐ, ஆக்ஸிஸ் போன்ற வங்கிகள் தான் அதற்கு பெரும் கடன் அளித்தவர்கள். இந்த விற்பனையின் வழியான கணக்கு நேராக்குதல் மூலம் கிட்டத்தட்ட 35,000 கோடி அளவு கடனை இந்த வங்கிகள் திரும்ப பெரும் இதற்கு இப்போது ராஸ்நெப்ட் பொறுப்பேற்றுக் கொள்கிறது அது எஸ்ஸார் குழுமத்திற்கு அளிக்க வேண்டிய தொகையில் இருந்து இந்த கடன் தொகையை திரும்ப செலுத்தும்.

2004 முதல் 14 வரை நாட்டை ஆண்டவர்கள் ஒரு போலி வளர்ச்சியை காட்ட பல லட்சம் கோடிகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து கொடுத்தார்கள் அதோடு 2ஜி, நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் அள்ளி தெளித்தார்கள் அது ஒரு சுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கவில்லை மாறாக வங்கிகளை திவால் நிலைக்கு தான் கொண்டு சென்றன. இந்த அரசு பொறுப்பேற்ற உடன் தான் இந்த நிறுவன கடன்கள் மெல்ல வசூலிக்க படுகின்றன பல நிறுவனங்கள் தங்களின் சில வணிக பிரிவுகளை மெல்ல விற்று கடனை திரும்ப செலுத்துகின்றன.

ஜே.பி குழுமம் தன்னுடைய சிமெண்ட் நிறுவனத்தை அல்ட்ரா டெக் நிறுவனத்திடம் 16,000 கோடி அளவில் விற்க ஒப்பந்தம் போட்டுள்ளது இதன் மூலம் கடன் தொகையில் ஒரு பங்கை செலுத்தும் அதோடு ஜி.வி.கே நிறுவனம் தன்னிடமிருந்த பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் 10% பங்குகளை 1300 கோடிக்கு விற்றது இதன் மூலம் தன்னுடைய கடன் சுமையை குறைப்பதே திட்டம். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்போகாம் தன்னுடைய தொலைபேசி கோபுர கட்டமைப்பை 25000 கோடிகளுக்கு விற்க பார்த்துக் கொண்டு இருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளில் எந்த பெரிய நிறுவனத்திற்கும் வங்கி கடன்கள் கொடுக்கப்படவில்லை மாறாக திரும்ப வசூலிக்கப்படுகிறது.

அதற்கு பதில் முத்ரா திட்டத்தில் இதுவரை ஒரு 7 கோடி பேருக்கு சிறு குறு தொழில்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது இனி வளர்ச்சி கீழிருந்து மேலே செல்ல வேண்டும் என்பதே நமது இலக்கு..

Leave a Reply