இந்தியாவில் கொரோனா வைரஸால் இது வரை 519 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வந்தவர்களே ஆவர். ஆனால், இன்று தமிழகத்தின் மதுரையில்  ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தபட்டுள்ளது. ஆனால், வெளிநாட்டு தொடர்பு இல்லாதவருக்கு எப்படி வைரஸ்தொற்று ஏற்பட்டது என்பது மிரட்சியாக உள்ளது.

இதற்கிடையே, நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி. இதனால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்குசமயத்தில் மக்கள் மனதளவிலும், உடலளவிலும் எப்படி சமாளிக்க வேண்டும் என சிலஅறிவுரைகளை வழங்கியுள்ளார் மனநல மருத்துவர் சிவபாலன்.

இந்த தருணத்தில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

1. இந்த நாட்களை ஒரு அவசரநிலையாக கருதி முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்.

2.கரோனா ஒரு உயிர்க் கொல்லி நோய் கிடையாது. பெரும்பாலானவர்களுக்கு இது வழக்கமாக வரும் ஒரு சளி இருமலைபோல வந்து சரியாகிவிடும். அதனால் அப்படிப்பட்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பதட்டப்படாமல் உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்.

3.அரசாங்கத்தின் அவசரகால தொலைபேசி எண்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள், மூச்சுத்திணறல், அதிககாய்ச்சல் போன்றவை இருந்தால் மட்டும் மருத்துவமனைக்கு சென்றால் போதும

4.முடிந்த வரை உங்களது நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் முக்கியமாக வீட்டில் இருந்து எந்தநேரமும் கரோனா தொடர்பான செய்திகளை தொடர்ந்துபார்ப்பதை தவிருங்கள் அதுவே ஒருமன உளைச்சலை ஏற்படுத்தும்.

5. முதியவர்கள் இருக்கும் வீடு என்றால் உங்களிடம் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி வையுங்கள் அவர்களுடன் நேரடிதொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம். அவர்களின் பாதுகாப்பு மிகமிக முக்கியம்.

6.அரசாங்கமும் மருத்துவர்களும் சொல்வதைதவிர வேறு யார் சொல்வதையும் நம்பாதீர்கள், குறிப்பாக அதை மற்றவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்யாதீர்கள்.

7. இந்தியாவிலேயே மிகவலுவான மருத்துவ கட்டமைப்பையும், மிகத்திறமையான மருத்துவர்களையும் கொண்ட மாநிலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். இங்குள்ள மருத்துவர்கள் எல்லாம் உங்களில் இருந்து வந்தவர்கள்தான். அதனால் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாங்கள் உங்களுக்காக எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதனால் எந்தஅச்சமும் இன்றி இந்த பேரிடரை நாம் எதிர்கொள்வோம்.

8. முக்கியமாக நீங்க உணர்ந்து கொள்ள வேண்டியது நீங்கள் ஒரு தனிமனிதர் கிடையாது இந்த தொற்றுநோய் பரவுவதை தடுப்பதில் உங்களுக்கு மிக முக்கிய பொறுப்பு இருக்கிறது.

நாம் அனைவரும் நமதுபொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து நின்றால் நிச்சயமாக இதிலிருந்து மீண்டு வந்து விடலாம். அப்படி நாம் மீள்வது ஒரு வரலாறாகவும், மற்றவர்களுக்கு பாடமாகவும் பின்னாளில் இருக்கும்.

 

 

Tags:

Comments are closed.