நிலைத்த மற்றும் யூகிக்கக்கூடிய வரிவிதிப்புகள் செய்யப்படும், நிறுவனங்களை பொறுத்த வரை தற்போதைய அரசு பல்வேறு சீர்த்திருத் தங்களை செய்ய தயாராக இருப்பதால் இந்தியாவில் முதலீடுசெய்வதற்கு இது சரியான நேரம். வரிவிதிப்பு முறைகளில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

பின்னோக்கிய வரிவிதிப்பு செய்யமாட்டோம் என கூறியுள்ளோம். உற்பத்தியை அரசு ஊக்கு விக்கும் பொறுட்டு, லைசென்ஸ் வழங்குதல், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமைபடுத் தியுள்ளோம்.

இந்த நூற்றாண்டு ஆசியா உடையது என்று தொடர்ந்து நான் கூறி வருகிறேன். இந்த நூற்றாண்டு உங்களுடையதாக இருக்க வேண்டு மெனில் இந்தியாவை மையமாக உருவாக்குவதே என்னுடைய ஆலோசனை.

அந்நியநேரடி முதலீட்டிற்கு இந்தியா மிகவும் உகந்த நாடு. பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு அந்நிய நேரடிமுதலீடு தற்போது 48 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது.

இந்தியாவுடைய பொருளாதார வளர்ச்சி தற்போது 7 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. வரும்  நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று உலகவங்கி ஐஎம்எஃப் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளது.

50 நகரங்களில் இது வரை மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப் பட்டுள்ளது. இந்த அரசு சாலைகள், துறைமுகம் மற்றும் ரயில்வே உள்ளிட்ட துறைகளின் உள்கட்டு மானத்தில் வளர்ச்சியை கொண்டுவந்து கொண்டிருக்கிறது.

மும்பையில் ‘மேக் இன் இந்தியா’ வாரத்தை தொடங்கி வைத்தது பிரதமர் நரேந்திர மோடி பேசியது.  

Leave a Reply