இது சும்மா வெறும் ட்ரெய்லர்தான். இனிமேல்தான் மெயின் பிச்சரே என தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல்மாற்றம் நடைபெற்றது, இது சும்மா ட்ரெய்லர்தான் இன்னும் 120 நாட்கள் உள்ளன தமிழகத்தில் பா.ஜ.க பெரும்மாற்றத்தை ஏற்படுத்த” என தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசியுள்ளார்.

தமிழக பாஜக சார்பில் வேல்யாத்திரை நிறைவு விழா திருச்செந்தூரில் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், சிறப்பு விருந்தினராக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, கூட்டத்தில்பேசிய தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை, வேல் யாத்திரைக்கு எத்தனையோ இடையூறுகளை தமிழக காவல்துறை சார்பில் குடுத்தனர். ஆனால், அதையும்மீறி பாஜக வென்றுள்ளது. இதன்மூலம் தமிழக பாஜக ஒருபுதிய அத்தியாயம் படைத்துள்ளது.

இன்னும் வெறும் 31 நாட்களில் தமிழகத்தில் அரசியல்மாற்றம் நடைபெற்ற உள்ளது. இது சும்மா வெறும் ட்ரெய்லர்தான். இனிமேல் தான் மெயின் பிச்சரே உள்ளது என்றார்.

அண்ணாமலையின் இந்த சஸ்பென்ஸ் குறித்து, பலரும் அறிய ஆர்வமாக உள்ளனர்.

Comments are closed.