நாட்டின் 13-வது துணை குடியரசுத் தலைவராக பதவி யேற்றுக் கொண்ட பின்னர் மாநிலங் களவையில் பேசிய வெங்கய்ய நாயுடு, “இனி நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை. அரசியலுக்கு அப்பாற் பட்டவனாக செயல்படுவேன். மாநிலங்களவை சுமுகமாக இயங்குகிறதா என்பதையும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கிறதா என்பதையும் உறுதி செய்வேன்” என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நாட்டின் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (வெள்ளிக் கிழமை) ராஷ்டிரபதி பவனில் வெங்கய்ய நாயுடுவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவின் போது, பிரதமர் மோடி, அத்வானி, பாஜக மூத்த தலைவர்கள், பாஜகவின் மத்திய அமைச்சர்கள் பலர் உடனிருந்தனர்.

பின்னர் மாநிலங்களவைக்கு வந்த அவர், மாநிலங்களவைத் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார். அப்போது அவர், “நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவன். ஒரு விவசாயியின் மகன். நீண்ட அரசியல் பயணத்துக்குப் பின் இந்த நிலையை அடைந் துள்ளேன். எனது பின்னணியை கருதியும் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்தும் எனது பணியை சிறப்பாக செய்வேன். எனக்கு கொடுக்கப் பட்டுள்ள கவுரவம் என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. எனக்கு ஆதரவு அளித்த அத்தனை பேருக்கும் கடமைப்பட்டுள்ளேன்” எனக் கூறினார்.

Leave a Reply