உ.பி.,யில் பிப்.,21 முதல் துவங்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டிற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்துவருகிறது.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி., ஏழைமாநிலம் என்ற நிலையை மாற்றுவதற்காக நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். உ.பி.,யை குற்றமில்லாத மாநிலமாக மாற்றுவதாக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாள் முதல் சொல்லி வருகிறோம். குற்றவாளிகள் முதலில் எச்சரிக்கப் பட்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தினாலோ, கொலை செய்தாலோ, போலீசாரை தாக்கினாலோ அதற்கான மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.

உ.பி., குற்றங்களாலும், குற்றவாளிகளாலும் முடக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். உ.பி., நடக்கும் குற்றங்கள், விபத்துக்களே. கலவரங்கள் அல்ல. குற்றச் சம்பவங்களை ஒடுக்கும் பணியிலேயே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உ.பி., உண்மையான உத்தரபிரதேசமாக மாறிவருகிறது. இனி பிரச்னை பிரதேசமாக உ.பி., இருக்காது.

Leave a Reply