நாடு சுதந்திரம் பெற்றபிறகு, மிகப்பெரிய தலைவர்களான ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், வல்லபபாய்படேல் உள்ளிட்டோர் இந்த நாடாளுமன்ற மையஅரங்கில் அமர்ந்து சட்டங்களை வகுத்துக் கொடுத்தனர். தற்போது அதேஇடத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஒன்றுசேர கூடியிருப்பது, அந்தத் தலைவர்கள் வகுத்தளித்த கூட்டாட்சித் தத்துவத்துக்கு சிறந்த சான்றாக அமைகிறது.

ஒருநாட்டின் வளர்ச்சி என்பது அரசின் நிர்வாகத்திறனைப் பொறுத்தே அமைகிறது. நல்ல நிர்வாகத்தை அளிக்கக் கூடிய அரசினால் மட்டுமே ஒருநாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல முடியும். சிறந்த நிர்வாகமும், விரைந்த திட்ட அமலாக்கமுமே வளர்ச்சிக்கான அடிப்படை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு காலத்தில், போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற அரசியல் பெரிய அளவில் வெற்றிபெற்றது. ஓர் அரசியல் கட்சி என்றால், இத்தனை போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும்; போராட்டங்களை நடத்தி பல முறை சிறை சென்றவரே சிறந்த அரசியல் தலைவராக இருக்கமுடியும் என்ற எண்ண ஓட்டங்கள் முன்பு இருந்தன. ஆனால், அந்தநிலை தற்போது மாறிவிட்டது. போராட்ட அரசியலை மக்கள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். வளர்ச்சிக்கான அரசியலை யார்முன்னெடுத்துச் செல்கிறார்களோ, அவர்களையே மக்கள் ஆதரிக்கின்றனர். எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உழைப்பதே இன்றைய அரசியலுக்கான சிறந்தஉத்தியாகும்.

தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாடு, டெல்லி நாடாளுமன்ற மையஅரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தமாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்து பேசியது:

Leave a Reply