இந்தியா டுடே – எம்ஓடிஎன் (Karvy Insights Mood of the Nation Poll) இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடி பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு செய்தநிலையில் அவருடைய தனிப்பட்ட புகழானது தொடர்ந்து பிரத்யேகமாகவே உள்ளது என தெரியவந்துள்ளது. விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு, தக்காளி உள்பட அத்தியாவசியபொருட்கள், காய்கறிகளின் விலை உயர்வு என்ற நிலையில் விமர்சங்களை மத்திய அரசு எதிர்க்கொண்டு உள்ளது. தேசத்தில் வேலை வாய்ப்பு இல்லாமையானது பொருளாதார அழுத்தத்தை காட்டுகிறது, இருப்பினும் கருத்துக் கணிப்பில் பங்குக்கொண்டவர்களில் 53 சதவித பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவை பதிவு செய்து உள்ளனர். 
 
வேலைவாய்ப்பு விவகாரத்தில் வாக்காளர்களின் சந்தேகமானது கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட சர்வேவை விட அதிகரித்து உள்ளது. 60 சதவித வாக்காளர்கள் மத்திய அரசின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது ஆதாயத்தை விட வலியையே கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளனர். இப்போது வரையில் மத்திய அரசின் கருப்புபணம் மீதான நடவடிக்கை மற்றும் ஊழல் அற்ற அரசு என்பது வாக்காளர் மத்தியில் இன்னும் பிரபலமாகவே இருந்துவருகிறது. 
 
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அருண்ஜெட்லி மற்றும் ராஜ்நாத் சிங் சிறப்பாக செயல்படுகின்றனர் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
பிரதமர் மோடியின் மாறாத புகழானது பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எழுச்சியை கொடுத்து வருகிறது.
 
இன்று பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் தேசியஜனநாயக கூட்டணியானது 42 சதவித வாக்குகளை பெறும், 349 தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியானது 28 சதவித வாக்குகளை பெறும், 75 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டணியில் இல்லாமல் பிற கட்சிகள் 30 சதவித வாக்குகளை தனதாக்கும், 119 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாற்று பிரதமர் என்றால் என்ற கேள்விக்கு 21 சதவித வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது, கடந்த ஜனவரி மாதம் வெளியான கருத்துக்கணிப்பைவிட 7 இடங்கள் பின்தங்கி உள்ளார் ராகுல் காந்தி.
 
அவரையடுத்து நிதிஷ்குமார் 13 சதவிதம், சோனியா காந்தி 12 சதவிதம், அரவிந்த் கெஜ்ரிவால் 4 முதல் 7 சதவிதம் வாக்குகளை பெற்று உள்ளனர். காங்கிரஸை சோனியா காந்தியின் குடும்பத்தை தவிர்த்து வேறு ஒருவரால் வலுப்படுத்த முடியுமா? என்றால் முடியும் என 43 சதவித பேர் கருதுகின்றனர். கருத்துக் கணிப்பின்படி மாநிலங்கள் எதிர்க்கட்சிகளுக்கு சற்று மகிழ்ச்சியை கொடுக்கும். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் கையே ஓங்கி நிற்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அடுத்த இடத்தில் நிதிஷ் வருவார் என கணிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply