லோக்சபாவிற்கு இன்றேதேர்தல் நடந்தால் மீண்டும் பிரதமராக மோடிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக இந்தியாடுடே- கர்வி இணைந்து ‛‛மூட் ஆப்தி நேசன்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

2014-ம் ஆண்டு பார்லி.லோக்சாபா தேர்தலில் பா.ஜ. தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரமதமர் வேட்பாளராக குஜராத் முன்னாள் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். இத்தேர்தலில் பா.ஜ. 282 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது. பிரதமராக மோடி பதவியேற்றார். கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியின் செயல் பாடுகள் கொண்டுவரப்பட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் மூலம் இன்றே லோக் சபா தேர்தல் நடந்தால் மீண்டும் பிரதமராக மோடிக்குவாய்ப்பு அதிகரித்துள்ளதாக இந்தியாடுடே ‛‛மூட் ஆப் தி நேசன்'' கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

பிரதமராக மோடி 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், நோட்டு ஒழிப்பு, ஒருதேசம் ஒரே வரிவிதிப்பு திட்டமான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, மேக் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா போன்ற பல்வேறுதிட்டங்கள், வெளிநாடுகளுடனான நட்புறவு போன்ற மோடி ஆட்சியின் செயல்பாடுகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன


இதன் அடிப்படையின் இந்தியாடுடே -கர்வி இணைந்து ‛‛மூட் ஆப் தி நேசன்' என்ற தலைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரியில் முதல் 2018-ம் ஆண்டு ஜனவரி வரையில் பல்வேறு தரப்பிலும் நடத்திய ஆய்வில் மோடியின் ஆட்சியின் செயல் பாடுகள் குறித்தும் 2019-ம் ஆண்டு நடக்க உள்ள லோக் சபா தேர்தலில் பா.ஜ. வெற்றிவாய்ப்புகள் குறித்து தனது கருத்து கணிப்பினை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது
 

 

நாடுசுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் சிறந்த பிரதமர் மோடி என 28 சதவீதமும், மறைந்த இந்திரா 20 சதவீதம், வாஜ்பாய் 10 சதவீதம், மறைந்தநேரு 8 சதவீதம் எனவும், பார்லி. லோக்சபாவிற்கு இன்றேதேர்தல் நடந்தால் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 543 தொகுதிகளில் 40 சதவீத வாக்குகளுடன் 258 தொகுதிகளில் வெற்றிபெறும். காங்.தலைமையிலான காங். கூட்டணி 22 சதவீத வாக்குகளுடன் 202 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் மற்ற கட்சிகள் 83 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

 

மீண்டும் பிரதமராக மோடி வருவதற்கு 53 சதவீதமும், காங். தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் பிரதமராக வருவதற்கு 22 சதவீதமும் வாய்ப் புள்ளது எனவும், 41 சதவீதம் பேர் மோடி ஆட்சியின் செயல் பாட்டிற்கு பாராட்டு தெரிவித் துள்ளனர் எனவும் கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாளை நாடு குடியரசுதின விழாவை கொண்டாடுகிறது. இன்று வெளியான கருத்துகணிப்பு பா.ஜ.ஆட்சி்க்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply