இன்றைய தினம், நம்முடைய நாடு நமது 73வது சுதந்திர தினத்தை மிக உற்சாகமாக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.இரண்டு காரணங்கள் ஒன்று, 47 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நாம் விடுதலை பெற்றோம் என்கின்ற மகிழ்ச்சி, மற்றொன்று,அன்று நாம் விடுதலைப் பெற்றிருந்தாலும் கூட நம்முடைய நாட்டினுடைய அங்கங்கள் பிளக்கப்பட்ட ஒரு காட்சியை அன்றைக்கு நாம் பார்த்தோம். அந்த வேதனை ஒருபுறம்.காஷ்மீர் நமது நாட்டினுடைய அங்கமாக இருக்குமா? இருக்காதா? என்று கேள்வி அது ஒரு புறம் இருந்த காரணத்தினாலேயே, அன்றைக்கு ஒரு மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாட முடியாத நிலைமையில் நம் நாட்டு மக்கள் இருந்தார்கள்.

600க்கு மேற்பட்ட சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டன. எல்லாம் முழுமையாக நம்மோடு இணைந்தார்கள்.ஜம்மு காஷ்மீர் என்ற ஒன்றை தவிர்த்து.அவர்கள் நம்மோடு இருப்பதற்கு அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கொடுக்கப்பட்டது. வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. செல்வங்கள் கொடுக்கப்பட்டன. எல்லாம் கொடுக்கப்பட்டாலும் அங்கிருக்கும் மக்கள் மத்தியிலே விஷ கருத்துக்கள் பரப்பப்பட்டன. அவர்கள் இந்தியர்கள் இல்லை என்ற உணர்வு மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட்டு கொண்டிருந்தது. காஷ்மீர் தங்களுடைய பகுதி என்று பாகிஸ்தான் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தது.

சென்ற 5ஆம் தேதி காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகள் மாற்றப்பட்டு, இந்தியாவினுடைய எந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேண்டுமானாலும் கூட, அவர்களோடு சரிசமமாக இணக்கமாக வாழ முடியும், பழக முடியும் இருக்க முடியும் என்ற நிலையை உருவாக்கித் தந்திருக்கிறார்திரு. நரந்திர மோடி அவர்கள்.

சுதந்திரத்திற்காக போராடிய எண்ணற்ற தியாகிகளுக்கு நாம் நம்முடைய மரியாதையை செலுத்துகின்ற இதே நாளிலே, காஷ்மீரத்தை நம்மோடு இணைக்க வேண்டும்,முழுமைப் பெற்றதாக மாற்ற வேண்டும் என்பதற்காக போராடி உயிர்துறந்த டாக்டர்சியாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்கள், இந்த நாட்டினுடைய ஒற்றுமைக்காக தம்முடைய உயிரை துறந்த ஆயிரக்கணக்கான போர் வீரர்கள், ராணுவ வீரர்கள் எல்லோருக்கும் நம்முடைய அஞ்சலியையும், வணக்கத்தையும் செலுத்த நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்.

73வது சுதந்திர தினமான இன்றைய தினம்,முழுமைபெற்ற சுதந்திர தினமாக கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த மகிழ்ச்சியை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நமது நன்றியை செலுத்துகின்றோம்.

காஷ்மீரம் மீண்டும் உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா மையமாக, அங்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்ற இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக்கூடிய இளைஞர்களாக மாறுகின்ற ஒரு காலத்தை நாம் பார்க்கப் போகின்றோம். அங்கிருக்க கூடிய மக்கள் இந்தியாவின் பிறப்பகுதி மக்களோடு கை குலுக்கக்கூடிய மகிழ்ச்சியான காலத்தை பார்க்கப் போகின்றோம்.
உரிமை மறுக்கப்பட்டு கிடந்த காஷ்மீரின் பட்டியலின மக்களுக்கு உரிமை கொடுக்கப்படக்கூடிய காட்சி நாம் பார்க்கப் போகின்றோம். உரிமை மறுக்கப்பட்டு கிடந்த காஷ்மீரத்து மலைவாழ் மக்களுக்கு, உரிமைகள் கொடுக்கப்படுவதை நாம் பார்க்க இருக்கின்றோம். உரிமை மறுக்கப்பட்டு கிடந்த காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த பெண்களுக்கு முழு உரிமைகள் வாழ்க்கையை கொடுக்கப்படுவதை நாம் பார்க்க இருக்கின்றோம்.
இந்த ஒரு அற்புத ஒரு அற்புத நிகழ்ச்சியை நிகழ்த்தி காட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நாம் நன்றி செலுத்துவோம். ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

காஷ்மீரம் நமக்குச் சொந்தம்.காஷ்மீரத்து மக்கள் நமக்குச் சொந்தம். ஜம்மு, லடாக் மக்கள் நமக்குச் சொந்தம். இந்த உணர்வுகளோடுகூட காஷ்மீரத்து வளர்ச்சிக்காக நமது பிரதமர் எடுக்க கூடிய அத்தனை முயற்சிக்கும் ஒவ்வொரு தமிழர்களும், துணை நிற்போம். காஷ்மீரத்தை வளர்த்துக் காட்டுவோம். காஷ்மீரத்தில் தமிழர்களின் உரிமையும் கொடுக்கப்பட்டிருக்கின்றதை உணர்ந்து வாழ்த்துவோம்.அனைவருக்கும் 73வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நன்றி! வணக்கம் !
– பொன். இராதாகிருஷ்ணன்

Tags:

Comments are closed.