புகைப்படம் மற்றும் வீடியோகாட்சி பதிவுகளுக்கான இணையதள பகுதி இன்ஸ்டாகிராம். இதில், பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் கணக்கு தொடங்கினார். உச்சி மாநாட்டில் எடுத்த புகைப் படத்தை முதன் முதலில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இந்நிலையில், உலகளவில் இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் 3-வது சர்வதேச தலைவராக பிரதமர் மோடி உள்ளார். மோடியை 10 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள்.


மேலும், இன்ஸ்டாகிராமில், உலக அளவில் மிகவும் அதிகம் பின் தொடரப் படுவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 7-வது இடத்தில் உள்ளது.

இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் பின்தொடரும் நபராக பராக் ஒபாமா உள்ளார். அவரை 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

இதனிடையே, ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கணக்குதுவங்கி தனது அன்றாட நடவடிக்கைகள் பற்றி அவ்வப்போது தெரிவித்துவரும் பழக்கம்கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்க்கது.

Leave a Reply