பாஜக ஆளும் மாநிலங்களான ம.பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் விரைவில் தேர்தல் நடக்க வுள்ளது. இது தவிர நாடாளுமன்ற  தேர்தலும் நெருங்கிவரும் நிலையில், இப்போதிருந்தே தேர்தல்பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்க உள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும்  நிலையில், இந்த மாநிலங்களில் மீண்டும் வெற்றி பெற்று செல்வாக்கை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் பாஜ உள்ளது. இந்த மாநிலங்களில் பாஜவை  வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஒன்றிணைய திட்டமிட்டுள்ளன. எனவே, இந்ததேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது.  இதை எதிர்கொள்ள பாஜ பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது.

தேசிய தலைவர் அமித்ஷா சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளார். இந்நிலையில், பாஜவின் செல்வாக்கை  உயர்த்தும்வகையில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாஜ செல்வாக்கு சரிந்திருந்ததாக கருதப்பட்ட  கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மோடியின் பிரசாரத்துக்குபின் கணிசமாக தொகுதிகளை பாஜ கைப்பற்றியது. நாடாளுமன்ற தேர்தல்  நெருங்கிவரும் நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு சவால்விடுக்கவும், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் பாஜ திட்டமிட்டுள்ளது. இதற்காக  இப்போதிலிருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்க பாஜ தலைமை முடிவு செய்துள்ளது.

அந்தவகையில், 80 எம்பி தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் இருந்து தேர்தல்பிரசாரத்தை பிரதமர் மோடி வருகிற 14ம் தேதி தொடங்குகிறார்.  பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் பிரதமர், பல்வேறு நலத் திடங்களை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, சட்டப் பேரவை தேர்தல்  நடைபெறவுள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Leave a Reply